Skip to main content

5 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த் - சரியா? தவறா?

5 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்த்

தமிழக அரசின் பாடத்திட்டத்தில் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட 5 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படமும், அவர் குறித்த தகவலும் பாடமாக வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல், நிர்வாகம், கலை, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள், தமிழக பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், வாழ்க்கையில் ஏழ்மை நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் உயர்ந்தவர்கள் பற்றிய "Rags to Riches Stories’ என்ற பாடத்தில் "பேருந்து நடத்துனராக இருந்து திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராகவும், கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

rajinikanth

இதனால் உற்சாகம் அடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு கல்வியாளர்கள் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

Fifth standard text books in Tamil Nadu to contain lessons about Actor Rajinikanth

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.