Skip to main content

365 நாட்களுக்கான வோடபோன் நிறுவனத்தின் புதிய திட்டம்!

வோடபோன் நிறுவனத்தின் புதிய திட்டம்

தனது பயனாளர்களுக்காக வோடபோன் நிறுவனம் 365 நாட்கள் திட்டம்
என ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய திட்டம் முதற்கட்டமாக கேரளாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

பிரதான அம்சங்கள்:

  • இந்த திட்டத்தின் மூலம் ஒரு ஆண்டுக்கு 547.2 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும்
  • இந்த திட்டத்தின் மூலம் 100 எஸ்.எம்.எஸ் க்களை ஒரு நாளைக்கு பெற முடியும்
  • அன்லிமிடெட் அழைப்புகள், இலவச ரோமிங் அழைப்புகள் பெற முடியும்

வோடாபோன் புதியதாக 1,999 ரூபாய்க்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத அழைப்புகளுடன் (Unlimited Calls), தினமும் 100 குறுஞ்செய்திகள் (SMS) (365 நாட்களுக்கு) என்ற அதரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய திட்டம் சில நாட்களுக்கு முன்னர் வெளியான 1,699 ரூபாய்கான திட்டத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளது. மேலும் இதுபோன்ற அதே திட்டங்கள் வோடபோனின் போட்டி நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திட்டம் கேரளாவில் முதலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, அதன் பிறகு மற்ற மாநிலங்களுக்கும் சில நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய திட்டத்தால் வாடிக்கையாளர்கள் சுமார் 547 ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய பிளானுடன் வாடிக்கையாளர்களுக்கு அளவில்லாத வெளியூர் அழைப்புகள் (STD) மற்றும் ரோமிங்கும் (Roaming Calls) பெறலாம்.

இந்த அறிவிப்பு விரைவில் வோடபோனின் வலைதளங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Vodafone Rs 1,999 Yearly Prepaid Plan With 1.5GB Daily Data Benefit Launched

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.