Skip to main content

360 டிகிரி கோணத்தில் அதிசய நீச்சல் குளம்!

360 degree swmming pool

55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன் பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம்.

லண்டனில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன் பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தின் நான்குப்புற சுவர்களும் கண்ணாடியால் ஆனதாகும். அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே குளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. 

360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம்

இந்த நீச்சல் குளத்தினை 'கேம்பஸ் நீச்சல் குளம் கட்டமைப்பு நிறுவனத்தின்" நிறுவனர் ஆலன் கேன்சலே வடிவமைத்துள்ளார்.

நீச்சல் குளத்தின் கீழே சுழலும் படிக்கட்டுகள் உள்ளன. இவை நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் இருந்து மக்களை கொண்டு செல்லும் எனவும், குளத்தில் இருந்து வெளியேற நினைப்பவர்களும் ஒரு பட்டனை அழுத்தினால், அந்த படிக்கட்டுகள் மீண்டும் வந்து அழைத்துச் செல்லும் எனவும் ஆலன் கூறியுள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

360 degree swimming pool

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.