Skip to main content

34 பில்லியன் டாலருக்கு விலை போன ரெட்ஹேட் நிறுவனம் !!!

34 பில்லியன் டாலருக்கு விலை போன ரெட்ஹேட் நிறுவனம்

ஐபிஎம் நிறுவனம் ரெட் ஹேட் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் 34 பில்லியன் டாலர் செலவில் வாங்க உள்ளது. அமெரிக்க வரலாற்றில் இதுவரையில் இதுதான் மூன்றாவது மிகப்பெரிய டீல் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து இரண்டு நிறுவனங்களும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: 

ரெட் ஹேட் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் ஐபிஎம் வாங்க உள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 190 டாலர் ஆகும். ரொக்கப் பணம் கொடுத்தே ஐபிஎம் இந்த நிறுவனத்தை வாங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு கடந்த 27ஆம் தேதி ரெட் ஹேட் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ. 116.68 டாலராக இருந்தது. தற்போது இதன் மதிப்பு ரூ. 190 டாலர் ஆக அதிகரித்துள்ளது. 

இந்த இணைப்பை அடுத்து ரெட் ஹேட் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஒய்ட்ஹர்ஸ்ட் இனி ஐபிஎம் நிறுவனத்தின் மூத்த மேலாண்மை அதிகாரிகள் குழுவில் இணைந்து செயல்படுவார். ஜின்னி ரோமெட்டி என்பவருக்கு இவர் ரிப்போர்ட் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

JIM
CEO of redhat James M. "JimWhitehurst , CEO of IBM Ginni Rometty

 

கடந்த 2016 ஆம் ஆண்டில் DEL - EMC இரண்டும் 67 பில்லியன் டாலர் வர்த்தக மதிப்பில் இணைத்துக் கொண்டன.

2000 ஆம் ஆண்டில் JDS மற்றும் SDL இரண்டும் 41 பில்லியன் டாலர் மதிப்பில் இணைந்தன. SDL நிறுவனத்தை JDS நிறுவனம் வாங்கியது. 

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ரெட் ஹேட் துவங்கப்பட்டது. குறிப்பாக சர்வர்கள் மற்றும் டாடா மையங்களில் பயன்படுத்தும் Linux என்ற மென்பொருளை விற்று வந்தது.

தற்போது பல்வேறு மென்பொருட்களை ரெட் ஹேட் விற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமான வளர்ச்சி கடந்த 2017- 2018 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்ட நிதி ஆண்டுகளில் 21% ஆக இருந்துள்ளது.

இதற்கு மாறாக ஐபிஎம் நிறுவனத்தின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

சர்வதேச வர்த்தக இயந்திரங்கள் நிறுவனம் (IBM) 170 உலக நாடுகளில் செயல்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நியூயார்க் நகரான ஆர்மோனிக்கை தலைமையிடமாகக் கொண்ட ஒரு அமெரிக்க பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும்.

IBM agrees to pay $34 billion to buy redhat

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.