Skip to main content

AN-32 ரக விமானப்படை விமானம்: பயணித்த 13 பேரின் உயிரிழப்பை உறுதி செய்த‌து விமான படை!!!

Air Force An-32 transport plane

மாயமான இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் விபத்துக்குள்ளானதை விமானப்படை உறுதி செய்துள்ளது, அதில் பயணித்த 13 பேரும் இறந்துவிட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம், கிளம்பிய அரைமணி நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.

an 32 iaf

ஒரு வாரத்திற்கு பிறகு கிடைத்த தடயம்!

இந்த தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோல் ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. 

இருப்பினும் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்றது. இதனிடையே கடந்த திங்களன்று அருணாச்சல பிரதேசத்தின், சியாங் மாவட்டத்தில் உள்ள கட்டி என்ற கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

iaf flight went missing

இதையடுத்து விமானத்தின் உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு மீட்புக்குழுவினர் இன்று காலை சென்றனர். 

13 பேரின் இறப்பு உறுதி:

அப்போது விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் ஆய்வு செய்ததில் 13 பேரில் ஒருவர் கூட பிழைக்கவில்லை என விமானப்படை உறுதி செய்தது.

13 பேரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

AN-32 crash: No Survivors, All 13 People on Board Dead.

AN 32

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.