Skip to main content

3000 அரசு பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் ‍- தமிழக பள்ளி கல்வித்துறை!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை

தமிழகப் பள்ளிப் கல்வித்துறையின் ஆலோசனை படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், "டேப்லெட்" என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத்தர திட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், "டேப்லெட்" வாங்க ஏலம் விடப்பட்டது.  

school education department

இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை தொடங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

இதற்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, "எல்மோ" என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்பறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

3000 Government Schools get Smart classrooms - School Education Department

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.