Skip to main content

3 ஆம் கட்ட மக்களவை தேர்தல் - 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது!

மக்களவை தேர்தல்

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் இன்று ஏப்ரல் 23 ம் தேதி 3-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தல்

இந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ம் தேதி அறிவிக்கப்படுகின்றன.

இந்த தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராகுல் காந்தி போட்யிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

3-வது கட்ட மக்களவை தேர்தல் - ஏப்ரல் 23 - மொத்தம் 116 தொகுதிகள் 

1. அசாம் - 4 தொகுதிகள்
2. பீகார் - 5 தொகுதிகள்
3. சத்தீஸ்கர் - 7 தொகுதிகள்
4. குஜராத் - 26 தொகுதிகள்
5. கோவா - 2 தொகுதிகள்
6. ஜம்மு காஷ்மீர் - 1 தொகுதி
7. கர்நாடகா - 14 தொகுதிகள்
8. கேரளா - 20 தொகுதிகள் (மொத்தம்)
9. மகாராஷ்டிரா - 14 தொகுதிகள்
10. ஒடிசா - 6 தொகுதிகள்.
11. உத்தர பிரதேசம் - 10 தொகுதிகள்
12. மேற்கு வங்கம் - 5 தொகுதிகள்
13. தாத்ரா நாகர் ஹவேலி - 1 தொகுதி
14. டாமன் மற்றும் டையூ. - 1 தொகுதி.
15. திரிபுரா - 1 தொகுதி

3-வது கட்ட மக்களவை தேர்தல்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின் அவர் அகமதாபாத்தில் வாக்களித்தார்.

முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த மோடியை, காந்தி நகர் பாஜக வேட்பாளர் அமித் ஷா வரவேற்று அழைத்துச் சென்றார்.

கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் தனது வாக்கை பதிவு செய்தார்.

3rd phase of Lok Sabha elections begins on April 23.

ahmadabad

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.