Skip to main content

25 ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு பிறகு "தி லயன் கிங்" தமிழ் பதிப்பில் பின்னணி குரல் கொடுக்கிறார் அரவிந்த் சாமி!

லயன் கிங்

25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "லயன் கிங் அனிமேஷன் படத்தின் தமிழ் பதிப்பில் முன்னணி கதாபாத்திரமான சிம்பாவுக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், தற்போது  வெளியாகவுள்ள தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறார் அரவிந்த் சாமி. 

'அயர்ன் மேன்' மற்றும் 'தி ஜங்கிள் புக்' புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, 'தி லயன் கிங்' மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்.

 

lion king

 

“தி லயன் கிங்” வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

இம்முறை இதில் இடம்பெறும் சிம்பா கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arvind Swami does it after 25 years!

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.