Skip to main content

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இறுதி நாளில் இந்தியாவிற்கு கிடைத்த‌ தங்கம்!

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய கடைசி நாளில், பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். 2, 3-வது இடங்களை பக்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் கடந்த 21 ஆம் தேதி துவங்கியது. இதில் கடைசி நாளான நேற்று ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டியது.

கேரளாவைச் சேர்ந்த 23 வயதான சித்ரா ஏற்கனவே 2017-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார். 

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

1,500 மீட்டர் ஓட்டத்தின் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார்.

தொடர் ஓட்டம் - வெள்ளிப்பதக்கம்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்.

பதக்கம் வென்ற ஆரோக்ய ராஜீவ் திருச்சியை சேர்ந்தவர். ராணுவத்தில் பணியாற்றும் அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

4 நாள் நடந்த போட்டியின் நிறைவில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என்று மொத்தம் 18 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

11 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலங்களுடன் பஹ்ரைன் முதலிடத்தை பிடித்தது.

Asian Athletics Championships: India bag four medals on final day; Occupies 4 th place.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.