Skip to main content

22 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது..

image

திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் 22 கல்லூரிகள் பங்கேற்கும் மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் 3 நாட்கள் நடத்தப்படுகிறது.

சென்னை:

திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் கல்லூரிகள் இடையேயான மாநில கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டி வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஐ.சி.எப் ஸ்போர் காம்பெளக்சில் நடக்கிறது.

இதன் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், எஸ்.டி.சி (பொள்ளாச்சி), சத்யபாமா, லயோலா, ஜமால் முகமது (திருச்சி), வி.ஐ.டி. (வேலூர்) பேட்ரிசியன் உள்பட 12 கல்லூரிகளும், பெண்கள் பிரிவில் எம்.ஒ.பி. வைஷ்ணவா, இந்துஸ்தான், ராணிமேரி, பி.கே.ஆர்.(கோபி செட்டி பாளையம்), எத்திராஜ், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்பட 10 அணிகளும் பங்கேற்கின்றன. மொத்தம் 22 கல்லூரிகள் கலந்து கொள்கின்றன.

‘லீக்’ மற்றும் நாக்அவுட் முறையில் இந்தப்போட்டி நடக்கிறது. இதன் தொடக்க விழா 23-ந்தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் மார்ட்டின் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Tamil