Skip to main content

21, 000 ரூபாய் மதிப்பில் புதிய போன் வாங்கி தந்தார் நடிகர் சிவகுமார்!!!

21, 000 ரூபாய் மதிப்பில் புதிய போன் வாங்கி தந்தார் நடிகர் சிவகுமார்!!!

செல்பி எடுக்கும் இளைஞரின் செல்போனைத் தட்டி விட்டது சர்ச்சையானதைத் தொடர்ந்து, 21, 000 ரூபாய் மதிப்பில் புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் சிவகுமார். இதனால் ராகுல் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மதுரையில் சமீபத்தில் தனியார் கருத்தரிப்பு மையத்தை சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது சிவகுமார் அருகில் வரும்போது, ஓரமாக நின்ற இளைஞர் ராகுல் தனது செல்போனை உயர்த்தி செல்பி எடுக்கும் ஆவலில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் சிவகுமார் திடீரென செல்பி எடுக்கும் ராகுல் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார். இச்செயலால் ராகுல் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த காணொளி பதிவு பெரும் வைரலாகப் பரவியது.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ராகுல் செல்போனைத் தட்டி விட்டது ஏன் என்று சிவகுமார் விளக்கம் அளித்தார். மேலும், அதற்கு காணொளி வடிவில் வருத்தமும் தெரிவித்தார்.

இந்நிலையில், இளைஞர் ராகுலுக்கு 21, 000 ரூபாய் மதிப்புள்ள புதிய போனை வாங்கிக் கொடுத்திருக்கிறார் சிவகுமார். அவர் சார்பாக இளைஞர் ராகுலிடம் செல்போன் வழங்கப்பட்டது. 

Actor Sivakumar buys a new cellphone worth 21,000 rupee

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.