Skip to main content

2027 ஆண்டிற்குள் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சும்: ஐக்கிய நாடுகள் சபை

population

2027 ஆண்டிற்குள் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சும் என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2019 மற்றும் 2050 க்கு இடையில் இந்தியாவில் கிட்டத்தட்ட 273 மில்லியனாக மக்கள் தொகை அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை கூறுகிறது. 

முன்னதாக 2022 ஆம் ஆண்டிலேயே சீனாவை விட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என ஐநாவின் முந்தைய கணிப்புகள் தெரிவித்தநிலையில் தற்போது இந்த கணிப்பு வெளியாகியுள்ளது.

population

உலக மக்கள் தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 2 பில்லியனை அதிகரிக்கும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. "உலக மக்கள் தொகை வளர்ச்சி 2019 " தற்போது 2050 ல் 7.7 பில்லியனிலிருந்து 9.7 பில்லியனாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவை அடுத்து நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு 2050 வரை உலகளாவிய மக்கள்தொகையில் அதிகரிக்க காரணம் என ஐநா தெரிவித்துள்ளது.

சீனாவில், மக்கள் தொகை 2019 மற்றும் 2050 க்கு இடையில் 31.4 மில்லியன் அல்லது 2.2 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

India to cross China's population by 2027: United Nations

population

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.