Skip to main content

2024 ஆண்டிற்குள் புதிய இந்தியாவை கட்டியெழுப்ப இலக்கு!!!

narendra modi

2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா இலக்கு வைத்துள்ளது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் பிற நாடுகளின் சகாக்களுடன் கலந்துரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஒரு புதிய இந்தியாவை உருவாக்கி வருவதாகவும், இது 2024 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.

 

modi and putin

 

5 வது கிழக்கு பொருளாதார மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். புதன்கிழமை, அவர் புடினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

India aims to build USD 5 trillion economy by 2024: PM Narendra Modi

Tamil