Skip to main content

2024 ஆம் ஆண்டு முதல் ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் டீசல் வாகனப்பதிவுகள் நிறுத்தம்!

மின் வாகனங்கள்!

2024 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல், டீசல் கார்களை பதிவு செய்வதை நிறுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சாலைகளில் பெட்ரோல், டீசல் கார்களை தவிர்த்து 10 லட்சம் மின்சார வாகனங்களை செயற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் அமராவதி நகரில், இந்த பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பதிவு செய்யும் முறை தடை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் வரவிருக்கும் முதல் ஸ்மார்ட் சிட்டியாக அமராவதி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விரிவான மின்சார வாகனம் (EV) (Extensive Electric Vehicle) கொள்கையை அறிவிக்கும் முதல் மாநிலமாக ஆந்திர பிரதேசம் திகழ்கிறது.

மாநில அரசு இந்த மின்சார வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 500 கோடி ரூபாய் மானியத்தொகையை அறிவித்துள்ளது. மேலும் இந்த முயற்சி 30,000 கோடி ரூபாய் வரை முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

andhra pradesh

ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் (APSRTC) பேருந்துகள் அனைத்தும் 2024 ஆம் ஆண்டுக்குள் மின் பேருந்துகளாக மாற்றுவதற்கு ஆந்திர மாநில அரசு முயற்சிக்கிறது.

மேலும் இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மின் சேமிப்பு நிலையங்களை அமைக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

chandra babu naidu


மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு பேசுகையில் "தொழில்துறையில் தெளிவான திசை தேவை, தெளிவான கொள்கை தெளிவாக இருந்தால் மட்டுமே தேசிய மற்றும் மாநில சிறு குறு அமைச்சகம் அவற்றை  நடைமுறைப்படுத்தும். 2024 ஆம் ஆண்டில் ஆந்திராவில் 1 மில்லியன் மின் வாகனங்கள் செயற்படுத்தப்படும் என நான் நம்புகிறேன்" என கூறினார்.

Registration of Petrol and Diesel cars will be stopped in Andhra Pradesh by 2024.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.