Skip to main content

2019 ஆண்டு மக்களவை தேர்தலை புறக்கணித்தார் - சுஷ்மா!!!

2019 ஆண்டு மக்களவை தேர்தலை புறக்கணித்தார் - சுஷ்மா!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அடுத்த மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். 66 வயதான சுஷ்மா, உடல் நிலை காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார்.

தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பாஜகவின் மிக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் . மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதி எம்.பியாக இருந்து வருகிறார்.

நீண்ட அனுபவம் கொண்ட அவர், முந்தைய வாஜ்பாய் அரசில் பல முக்கிய துறைகளின் அமைச்சராக விளங்கினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி இருந்தபோது மக்களவை எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்தார். 2014 மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜக சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பிரசாரத்துக்காக சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார்.

அப்போது சில செய்தியாளர்களிடம் பேசிய அவர் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனை அதிகாரபூர்வமாக அவர் அறிவிக்கவில்லை.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறுநீர் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சுஷ்மா, மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டார். 

Minister of Foreign Affairs Sushma Swaraj will not contest in 2019 Lokshaba polls.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.