Skip to main content

2019 ஆம் ஆண்டிற்கான மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை காலிப்பணியிடங்கள்!

2019 ஆம் ஆண்டிற்கான மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை காலிப்பணியிடங்கள்!

மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை ஆட்சேர்ப்பு 2019: 

தலைமை காவலர் (Head Constable) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்ய மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (CSIF) அழைப்பு விடுத்துள்ளது. விண்ணப்பப்படிவத்தின் மூலம் விருப்பமான வேட்பாளர்கள் தலைமை காவலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி கடைசி ஆகும். 

கல்வி தகுதி:

இடைநிலை (பத்தாம் வகுப்பு) அல்லது மூத்த மேல்நிலைப்பள்ளி (12 ஆம் வகுப்பு) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பதவிக்கு தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு:

18 முதல் 25 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு வகை வேட்பாளர்களுக்கான வயது தளர்வு அளிக்கப்படும்.

ஆட்சேர்ப்புச் முறை:

உயரம் (Height Bar Test), உடல் தரநிலை டெஸ்ட் (Physical Standard Test), ஆவணங்கள் (Documentation), எழுத்து தேர்வு (Written Test), திறன் சோதனை (தட்டச்சு) (Skill Test) மற்றும் மருத்துவ பரிசோனை (Medical Examination) செய்யப்படும்.

CISF தலைமை காவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் ஆன்லைன் முறையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி மாதம் 20 வரை தொடரும். எனவே வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி கடைசி ஆகும். 

முக்கிய நாட்கள்

ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்ப முதல் நாள் : 21 ஜனவரி 2019
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்: 20 பிப்ரவரி 2019

விண்ணப்ப கட்டணம் 

பொது மற்றும் ஓ.பி.சி. வேட்பாளர்கள் - ரூ. 100 / -

எஸ்.சி பிரிவினர், எஸ்.டி பிரிவினர், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் - கட்டணம் இல்லை.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை அணுகவும்,

https://www.cisf.gov.in/

CSIF Recruitment 2019 Notification Issued for 429 Head Constable Posts, Check Official PDF Here

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.