Skip to main content

2019‍-20 நிதியாண்டிற்கான தமிழக நிதி நிலை அறிக்கை: முக்கிய அம்சங்கள்!

O PANEERSELVAM

தமிழக சட்டமன்றத்தில் 2019-20 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்தார். இது பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 8 வது பட்ஜெட் ஆகும். 
தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20-ம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். வரும் நிதி ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் 3.97 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவித்தார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு, குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு, வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு.

சமுக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக 3,958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

விபத்து மூலம் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு நிவரணமாக 4 லட்சம் ரூபாயும், நிரந்தர ஊனத்திற்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.

ஆயுள் காப்பிடு திட்டம் மூலம் இயற்கை மரணங்களுக்கு 2 லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.

அடுத்த நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 16.87% உயரும் என கணிப்பு.

O PANEERSELVAM

சென்னை கோவை மதுரையில் முதற்கட்டமாக 500 எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும்.

வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு 1,031கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

மதுரை திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படும்.

ராமேஸ்மவரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய கலை அறிவியல் கல்லூரி திறக்கப்படும்.

மாநில பேரிடர் நிதிக்காக 825 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

சென்னையில் ரூ.2000 கோடி ரூபாய் செலவில் நிலத்தடி ம்ற்றும் அடுக்குமாடி வாகன நிறுத்த வசதிகள் செய்யப்படும்.

வருவாய் துறைக்கு 6,106.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ. 1,700 கோடி ஒதுக்கீடு.

நகராட்சிகளில் குடி நீர் வசதிக்காக18,700 கோடி நிதி ஒதுக்கீடு.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3,000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விரிவான விபத்துக் காப்பீடு திட்ட்டம் அறிமுகம்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு 

உழவர் பாதுகாப்பு திட்டத்திற்காக 169.71 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு நடப்பு நிதி ஆண்டில் ரூ. 10,000 கோடி வரையில் பயிற் கடன் வழங்கப்படும்.

சூரிய மின் சக்தியில் இயங்கும் 2,000 பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நதிக்கரையோரம் வசிக்கும் 38,000 பயனாளிகளுக்கு 4647.50 கோடி ஒதுக்கீடு.

பிரதமரின் பயிற் காப்பிட்டு திட்டத்தில் மாநில அரசின் பங்காக 621.59 கோடி ஒதுக்கீடு. இந்தத் திட்டம் கீழ் 21.70 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

2,000 உழவர் உற்பத்தியாளர் குழுக்கல் அமைக்க 100.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு.

கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகைக்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

குறைந்தபட்ச ஆதார விலை கீழ் தமிழகத்தில் உளுந்து கொள்முதல் செய்யப்படும்.

வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்காக 172.06 கோடி ஒதுக்கீடு.

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்காக ரூ. 300 கோடி ஒதுக்கீடு.

வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ. 10,550.50 கோடி ஒதுக்கீடு.

பயிற் கடன் தள்ளுபடிக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படும்.

FARMERS

மெட்ரோ ரயில் திட்டத்தை வண்டலூர் வரை நீட்டிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

பால்வளத்துறைக்கு 258.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு 281.86 கோடி ஒதுக்கீடு.

முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மூலம் 1,1512.10 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பீடு.

அரசு அலுவலர்கள் ஊதியத்திற்காக ரூ. 55,399.75 கோடி ஒதுக்கீடு

சிறப்பு திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வி உதவி தொகைக்காக 1,857.13 கோடி ஒதுக்கீடு.

கல்லூரி, பள்ளி விடுதி மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் வழங்க 103.55 கோடி ஒதுக்கீடு.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல துறைக்கு 911.47 கோடி ஒதுக்கீடு.

பள்ளி மாணவர்கள் மிதிவண்டி திட்டத்திற்கு 138.48 கோடி ஒதுக்கீடு.

காவல் துறையைநவீனமயமாக்க ரூ. 111.57 கோடி ஒதுக்கீடு

காவல் துறைக்கு 8,084.80 கோடி நிதி ஒதுக்கீடு.

சத்துணவு திட்டத்திற்கு 1,772.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

திருமண நிதியுதவி திட்டத்திற்கு 726.32 கோடி ஒதுக்கீடு.

சுற்றுலா தளங்களில் தனியாருடன் இணைந்து கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.

தமிழக அரசின் நடவடிக்கையால் சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு அதிகமாகும்.

சுற்றுலா தளங்களில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் போக்குவரத்து அரசு - தனியார் பங்களிப்புடன் உலகத்தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக வர்த்தக மற்றும் முதலீட்டு மையம் அமைக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு 476.26 கோடி ஒதுக்கீடு.

முதலீடுகளுக்கு மானியம் வழங்க வரும் நிதி ஆண்டில் ரூ. 2500 கோடி ஒதுக்கீடு.

வானூர்தி, ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பவர்களுக்கு ஊக்கமளிக்கப்படும்.

தொழில்துறைக்கு முதலீட்டு மானியமாக 2,747.96 கோடி ரூபாய் ஒதுக்கபட்டுள்ளது.

ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை மக்கள் எளிமையாக பயன்படுத்த உயர் மையம் அமைக்கப்படும்.

கைவினை மற்றும் கதர் துறைக்கு ரூ.211.11 கோடி ஒதுக்கீடு

கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1,170.56 கோடி ஒதுக்கீடு.

வேலையில்லா பொறியியல் பட்டதாரிகளுக்குத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகளுக்கு 2,681 கோடி ஒதுக்கீடு.

பொதுப்பணித்துறையின் கீழ் 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு இந்தாண்டு 250 கோடி நிதி ஒதுக்கீடு.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மானியம் வழங்க, பட்ஜெட்டில் 148.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை சுத்திகரிப்பு செய்து அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்குமான திட்டத்தை அரசு - தனியார் பங்களிப்பு முறையில், 5259.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது .

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைப்பதை வலுப்படுத்துவதற்காக தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு 111.57 கோடி ரூபாய் உட்பட 8,084 கோடி ஒதுக்கீடு

பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம் கீழ் இணைந்து செயல்பட 1,363 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மாணவர்களுக்கு

மாணவர்களுக்கு புத்தகப் பைகள் காலணிகள் நோட்டு புத்தகங்கள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லா திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் இதற்காக 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் 1,656.90கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு.

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ. 460.25 கோடி ஒதுக்கீடு.

2018-2019 நிதி ஆண்டில் டாஸ்மாக் வருவாய் 7262.33 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் தகவல்.

உயர் கல்வித் துறைக்கு 4584.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

SCHOOLS

10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்டும்.

தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசு பள்ளி மாணவர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.

ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ. 4,570 கோடி ஒதுக்கீடு.

தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு 364 கோடி ஒதுக்கீடு.

மகாத்மா காந்தி திட்டன் கீழ் வேலையை தொடர்ந்து வழங்க 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

குறைந்தபட்ச தேவைகள் திட்டத்திற்கு 286 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வறுமை ஒழிப்பு திட்டங்களுகு ரூ.1,031 கோடி ஒதுக்கீடு.

திறன் மிகு நகரங்கள் திட்டத்திற்கு 1,650 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறக்கு 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

2019-2020 ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.16% ஆக எதிர்பார்க்கப்படுவதால் உயர்வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்ல ஒரு நல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.

2011-2012 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 1,03,600 ரூபாயாக இருந்த தனிநபர் வருமானம் 2017-2018 ஆம் ஆண்டில் 1,42,267 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ. 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஊரக வளர்ச்சித் துறைக்கு 18,273.96 கோடி ஒதுக்கீடு.

பள்ளிக் கல்வித்துறைக்கு 28,757 கோடி நிதி ஒதுக்கீடு

கிராமப்புற சாலைகள் திட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

அணைகளை புனரமைக்க 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உணவு மானியத்திற்காக ரூ.1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

சென்னையை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளை மேம்படுத்த 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

அடையாறு மற்றும் கூவம் ஆற்றை சீரமைக்க 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஆழ்கடல் மீனவர்களின் தொலைத்தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்படும்.

மீனவர்களுக்கு 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைப்பேசி மற்றும் நேவிகேஷன் கருவிகள் வழங்கப்படும்.

9,000+ சீருடை பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும்.

சுகாதார துறைக்கு 12,563கோடி ஒதுக்கீடு

Tamil Nadu Budget 2019-20: Highlights

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.