Skip to main content

2.0 படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு‍ - களைகட்டும் சத்யம் திரையரங்கம்!!!

2.0 படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு‍ கலைக்கட்டும் சத்யம் திரையரங்கம்!!!

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள ’2.0’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகவுள்ள நிலையில், அதற்காக நடைபெறும் வெளியீட்டு விழாவில் ஷங்கர், ரஜினிகாந்த், ரஹ்மான் உட்பட படக்குழுவை சேர்ந்த பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள ’2.0’ டிரெய்லர் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை சத்யம் திரையரங்கில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

திரையரங்கின் நுழைவுவாயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு போடப்பட்டு, கட்டிடத்தை சுற்றியும் 2.0 பட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ரோபோ கதாபாத்திரத்தில் தோன்றும் ரஜினியின் பொம்மைச் சிலைகள் பல நிறுவப்பட்டுள்ளன. 

திரையரங்கில் வெளியிடப்படும் அதேநேரத்தில் 2.0 பட டிரெய்லர், யு-டியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியிடப்படும். சத்யம் சினிமாஸ் உட்பட குறிப்பிட்ட சில திரையரங்குகளில் இந்த டிரெய்லரை 3Dயில் பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.