Skip to main content

2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு தொடரை தாரைவார்த்தது இந்தியா!

india vs aus5 th odi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரை 2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணிக்கு தாரைவார்த்தது.

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மார்ச் 13 ஆம் தேதி நடந்தது.

இந்திய அணியில் இரு மாற்றமாக யுஸ்வேந்திர சாஹல், லோகேஷ் ராகுல் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெரேன்டோர்ப்புக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் லயன் இடம் பிடித்தனர். 

aron finch

‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் கவாஜாவும் இந்த தடவையும் தங்கள் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 273 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு திருப்திகரமான தொடக்கம் அமையவில்லை.

india vs aus

இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 237 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.

வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி அதன் பிறகு எழுச்சி பெற்று "ஹாட்ரிக்" வெற்றியுடன் கோப்பையை சொந்தமாக்கியிருக்கிறது. 

இந்த தொடரில் 2 சதம், 2 அரைசதத்துடன் மொத்தம் 383 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது இரண்டையும் தட்டிச் சென்றார்.

india vs australia

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.