Skip to main content

153 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்-இந்தியாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

153 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்-இந்தியாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு

மும்பையில் நடைபெற்ற நான்காவது ஒரு நாள் தொடரில் இந்தியா அபார வெற்றி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலை.

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் 2 டெஸ்டிலும் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. 

இதையடுத்து கவுஹாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று, 1-1 என ஒருநாள் தொடரில் சமநிலை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி, மும்பையில் நேற்று அக்டோபர் 29 ஆம் தேதி நடந்தது. 

153 ரன்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்-இந்தியாவிற்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு
ரோஹித் சர்மா

 

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தது, ரோகித் சர்மா (162), ராயுடு (100) ஆகியோர் சதம் விளாசி கைகொடுக்க, இந்திய அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 377 ரன்கள் குவித்தது.

இமாலய இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் அணி, 36.2 ஓவரில் 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி, 224 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

மும்பையில் நடைபெற்ற இந்த ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, புனேவில் நடைபெற்ற ஆட்டத்தின் தோல்விக்கு பதிலடி கொடுத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் ஒரு போட்டியே இருப்பதால் இந்திய அணி தொடரை இழக்க வாய்ப்பில்லை, மேற்கிந்திய அணி வென்றால் தொடர் ஒரு அரிய சமன் ஆகும். ஆனால் இன்று வாங்கிய மிகப்பெரிய உதை அவர்களை அடுத்த போட்டிக்குள் எழும்பச் செய்யுமா என்பது கேள்வியே. இதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

India leads the ODI against West Indies with 2-1, by the winning of 4 th odi at Mumbai

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.