Skip to main content

12 வது ஐபிஎல் தொடர்: முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு!

ipl

2019 ஐபிஎல் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 2019 ஐ.பி.எல் டி-20 லீக் தொடருக்கான முதல் இரண்டு வார போட்டிகளுக்கான அட்டவணை வெளியானதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தப் போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கடந்த 20-ம் தேதி (20.12.18) ஜெய்ப்பூரில் நடந்தது. அதிகபட்சமாக, தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேவிலைக்கு, ஜெய்தேவ் உனத்கட்டை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, மொஹித் சர்மா ரூ.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

ipl

ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டி எங்கே நடக்கும், எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.  ஐபிஎல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல், மே மாதங்களில் பொதுத்தேர்தல், உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால், போட்டியை எங்கு நடத்துவது என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் முதலிரண்டு வாரங்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஐ.பி.எல் தொடக்க போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

CSK face RCB in IPL 2019 opener as BCCI announces schedule for first 17 matches.

csk

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.