Skip to main content

12 வது ஐசிசி உலகக்கோப்பை: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

12 வது ஐசிசி உலகக்கோப்பை

10 அணிகள் பங்குபெறும் 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த போட்டிக்கான உத்தேச அணிகளின் பட்டியலை ஏப்ரல் 23-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்து இருந்தது. 

இதன்படி கடைசி அணியாக வீரர்களின் பட்டியலை ஐசிசி இடம் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் சமர்ப்பித்தது. ஆனால் அணியில் யார்-யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படாமல் இருந்தது.

​west indies

இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி விவரம் வெளியிடப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

ஆனால் அதிரடி மன்னன் பொல்லார்ட், சாமுவேல்ஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

விரலில் காயத்தால் அவதிப்படும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரினும் ஓரங்கட்டப்பட்டார்.

39 வயதான கிறிஸ் கெய்ல் தனது இடத்தை தக்க வைத்துள்ளார். இது அவருக்கு 5-வது உலக கோப்பை போட்டியாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணி விபரம்:

ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பாபியன் ஆலென், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெய்ட், ஷெல்டன் காட்ரெல், ஷனோன் கேப்ரியல், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், ஷாய் ஹோப், இவின் லீவிஸ், ஆஷ்லே நர்ஸ், நிகோலஸ் பூரன், கெமார் ரோச், ஆந்த்ரே ரஸ்செல், ஒஷானே தாமஸ்.

World Cup: West Indies name Andre Russell in squad

 

12 வது ஐசிசி உலகக்கோப்பை

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.