Skip to main content

12 வது ஐசிசி உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர்க்கு வாய்ப்பு!

Australia’s Full 15-Man Squad For the 2019 ICC World Cup 

12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (2019) இங்கிலாந்தில் மே 30 ஆம் தேதி முதல் ஜூலை 14–ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஆரோன் பிஞ்ச் கேப்டனாக தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளார்.

Australia’s Full 15-Man Squad For the 2019 ICC World Cup 

ஓர் ஆண்டு தடைக்கு பின்னர் உலக கோப்பை அணியில் இடம்பிடித்த வார்னர் மற்றும் ஸ்மித்

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருந்த முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரின் தடை காலம் முடிந்து விட்டதால் இருவரும் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார்களா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியிலும், ஸ்டீவன் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட உஸ்மான் கவாஜாவுக்கு அணியில் இடம் கிடைத்து இருக்கிறது.

Australia’s Full 15-Man Squad For the 2019 ICC World Cup 

உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வருமாறு:-

  1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்),
  2. டேவிட் வார்னர்,
  3. உஸ்மான் கவாஜா,
  4. ஸ்டீவன் சுமித்,
  5. ஷான் மார்ஷ்,
  6. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்),
  7. மார்கஸ் ஸ்டோனிஸ்,
  8. மேக்ஸ்வெல்,
  9. மிட்செல் ஸ்டார்க்,
  10. ஜெயே ரிச்சர்ட்சன்,
  11. கம்மின்ஸ்,
  12. ஜாசன் பெரேன்டோர்ப்,
  13. நாதன் கவுல்டர் நிலே,
  14. ஆடம் ஜம்பா,
  15. நாதன் லயன்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை (ஜூன் 1-ந் தேதி) எதிர்கொள்கிறது.

Australia’s Full 15-Man Squad For the 2019 ICC World Cup 

Australia’s Full 15-Man Squad For the 2019 ICC World Cup 

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.