Skip to main content

+1 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்: 95% மாணவர்கள் தேர்ச்சி

 +1 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்: 95% மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் இன்று மே 8 ஆம் தேதி வெளியாகிறது. +2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று +1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 95 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்கள் 93.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 96.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

2,634 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. மதிப்பெண் பட்டியலை முதலில் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது 14-ம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். 

கடந்த ஆண்டு 87.4 சதவீத மாணவர்களே தேர்ச்சி பெற்ற நிலையில் நடப்பாண்டில் தேர்ச்சி சதவீதம் 93.3- ஆக உயர்ந்துள்ளது. 

மாற்றுத்திறனாளி மாணவர்கள்:

தேர்ச்சி விவரம் - தேர்வு எழுதிய 2,896 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 2,721 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சிறைக் கைதிகள் தேர்ச்சி விவரம்:

தேர்வு எழுதிய 78 சிறைக் கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் முதலிடம்

+1 தேர்வு முடிவில் 98 சதவீத தேர்ச்சியை பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

பின் தங்கிய அரசுப் பள்ளிகள்:

+1 தேர்வில் மற்ற பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் 90.6 சதவீதமே தேர்ச்சி பெற்றுள்ளது. தமிழகத்தின் சராசரி தேர்ச்சி விகிதம் 95%.

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் (Govt Aided) தேர்ச்சி விகிதம் 96.9%

TN HSC +1 Result Declared: 95% Clear Tamil Nadu +1 Board Exam

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.