Skip to main content

+1 தேர்வு முடிவுகள்: ஈரோடு மாவட்டம் முதலிடம்!

தமிழகம்

தமிழகத்தில் +1 தேர்வு முடிவுகள் இன்று மே 8 ஆம் தேதி வெளியாகிறது. +2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று +1 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் முதலிடம்

+1 தேர்வு முடிவில் 98 சதவீத தேர்ச்சியை பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

காலை சரியாக 9.30-க்கு +1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை  அதிகாரப்பூர்வ இணைய தளங்களான  http://tnresults.nic.in/ மற்றும் http://dge.tn.nic.in/ ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம். 

கடந்த ஆண்டை விடவும் 23 நாட்கள் முன்கூட்டியே இந்த ஆண்டு +1 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை பதிவு எண், பிறந்த நாள் ஆகியவற்றை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

hsc +1 result

முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள்!

1. ஈரோடு - 98.08 %

2. திருப்பூர் - 97.90 %

3. கோவை - 97.60 %

கடைசி 3 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:

1. வேலூர் - 89.29 %

2. கடலூர் - 89.76%

3. கிருஷ்ணகிரி - 90.93 %

மெட்ரிக் பள்ளிகள் 99.1 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

result

பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம் :

1. மொழிப்பாடம் (முதன்மை மொழி): 97.5%

2. ஆங்கிலம்: 97.6%

3. கணினி அறிவியல்: 98.2%

4. வணிகவியல்: 97.7%

5. கணக்குப் பதிவியல்: 97.7%

6. வரலாறு: 95.1%

7. இயற்பியல்: 94.6% 

8. வேதியியல்: 95.7%

9. உயிரியல்: 97.1% 

10. கணிதம்: 96.9%

11. தாவிரவியல்: 91.1% 

12. விலங்கியல்: 93.0%
 

TN HSC +1 Result Declared: With Highest Pass Percentage Erode (98.08%) Tops in Tamilnadu.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.