Skip to main content

யமஹா நிறுவன ஊழியர்கள் மூவர் கைது

yamaha pvt ltd

நீதிமன்ற உத்தரவின் படி நடக்க மறுத்ததாக மனிதவள அதிகாரி குற்றச்சாட்டு.
 

இந்திய யமஹா மோட்டார் நிறுவன ஊழியர்கள் மூவரை சட்டவிரோத குற்றச்சாட்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 1 -ஆம் தேதி அந்நிறுவனத்தின் மூத்த மேலாளர் எஸ்.ராஜேஷ், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அளித்திருந்த புகாரில், வடகால் கிராமத்தில் 690 ஊழியர்கள் செப்டம்பர் 21 -ஆம் தேதியிலிருந்து அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.  

ஆலையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் போராட்டம் நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்த பின்னும் அவர்கள் அந்த வளாகத்தை விட்டு வெளியே செல்ல மறுத்துவிட்டனர்.

 

yamaha

 

வேலை நிறுத்தம் செய்த ஊழியர்கள் செப்டம்பர் 26 அன்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து அகற்ற முயன்றனர்.அவர்களில் சிலர் குழாய்த்திட்டம், தொலைபேசி கோபுரம் மற்றும் சிலர் அங்கிருந்த மரங்களின் மீது ஏறினர். மேலும் அவர்கள் பேருந்தின் மீதும்,வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்களின் மீதும் சிறு தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

யமஹா நிறுவனத்தின் சொத்துக்களை பாதுகாப்பதற்காகவும்,எந்த இடையூறும் இன்றி ஆலைகள் இயல்பாக இயங்குவதற்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அக்டோபர் 1 - ஆம் தேதி 143, 147, 188, 294 (பி), 309, 427, 447 மற்றும் 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அக்டோபர் 2 அன்று மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் புதன்கிழமை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். 


 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.