Skip to main content

வங்காள விரிகுடாவின் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை

heavy rainfall

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தீவிரமாகும் என்று இந்திய வானிலைத் துறை அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் நன்கு அறியப்பட்ட குறைந்த காற்றழுத்தமானது, அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 7-ஆம் தேதி தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9 வரை, மீனவர்கள் வங்காள விரிகுடாவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்குச் செல்வதற்கு எதிராக, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில், வங்காள விரிகுடாவின் தென்கிழக்குக்கு வடக்கே ஒரு புதிய குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து அடுத்த 72 மணி நேரத்தில் ஒடிஷாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மண்டல வானிலை மைய துணை பொது இயக்குனர் திரு எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார். 

குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக, இன்று காலை 8 :30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. இந்திய நேரப்படி அக்டோபர் 7 ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான மீமிசலில் 13 செ.மீ மழைப்பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் தலா 8 செ.மீ, திருப்பூர் மாவட்டம் மற்றும் தென்காசி பகுதியில் தலா 7 செ.மீ, கோத்தகிரி, செங்கோட்டை, புதுக்கோட்டை மற்றும் திருபுவனத்தில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றும் திரு.பாலச்சந்திரன் கூறினார்.

இன்று காலை 8 :30 மணியுடன் முடிவடைந்த நிலையில்,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் சில இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி போன்ற இடங்களில் அதிக கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள சில இடங்களில், கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதால் தான் காலநிலை மாற்றங்கள் இப்படி இருப்பதாக திரு.பாலச்சந்திரன் கூறினார்.

அரேபிய கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டது, இது தற்போது லச்சத்தீவின் மினிக்காய் தீவுகளில் இருந்து 920 கி.மீ. தொலைவில் உள்ளது, அடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளியாக வலுப்பெற்று ஓமன் நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 12-ஆம் தேதி வரை தென் மற்றும் மத்திய அரேபிய கடலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாரகள்.

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.