Skip to main content

வித்யா பாலன் மாறுபட்ட தோற்றத்தில் சகுந்தலா தேவி பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

shakuntaka devi

வித்யா பாலனின் வரவிருக்கும் படமான சகுந்தலா தேவியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

படத்தின் டீஸரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில், வித்யா பாலன் குறுகிய தலைமுடி மற்றும் சிவப்பு சேலையில் தோற்றமளிக்கிறார்.

அனு மேனன் இயக்கும் "சகுந்தலா தேவி" திரைப்படம், இந்தியாவின் பெண் கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படம் வரும் 2020 கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.

shakunthala devi

இந்தியாவின் பெண் கணித மேதை என்றழைக்கப்படும் சகுந்தலா தேவியின் கணித மூளை முதன்முதலில் 5 வயதில் வெளிப்பட துவங்கியது.

18 வயது மாணவர்களுக்கான கணித கணக்குகளை 5 வது வயதிலேயே செய்யும் திறன் கொண்டவராக திகழ்ந்தார். அவர் ஒருபோதும் முறையான கல்வியைப் பெறவில்லை என்றாலும், எண்களுக்கான அவரது திறமை 1982 ஆம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தின் உலக சாதனைகளில் அவருக்கு ஒரு இடத்தை அளித்தது.

கணிதவியலாளர் என்பதைத் தவிர, சகுந்தலா தேவி ஒரு ஜோதிடர், சமையல் புத்தக எழுத்தாளர் மற்றும் ஒரு நாவலாசிரியர் ஆவார்.

shakunthala devi

கல்லூரிகளில், திரையரங்குகளில், வானொலியில் மற்றும் தொலைக்காட்சியில் - தனது கணிதக் கருத்துக்களை நிரூபித்து உலகம் முழுவதும் பயணம் செய்தார். 

அவர் ஓரினச்சேர்க்கையாளர்களின் உலகம் என்ற புத்தகத்தையும் எழுதினார் (The World Of Homosexuals).

Shakuntala Devi first-look poster: Vidya Balan is unrecognisable as Human Computer

Tamil