Skip to main content

விஜய் சேதுபதியின் "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய் சேதுபதியின் "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

திருநங்கையாக விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘ஆரண்யக் காண்டம்’ படத்தை இயக்கிய இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தற்போது ‘சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார்.

திருநங்கை கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா. மேலும் இந்தப் படத்தில் மலையாள படத்தின் முன்னணி ஹீரோ பகத் பாசில், நடிகைகள் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, இயக்குனர் மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில் விஜய் சேதுபதி திருநங்கையாக இருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதியின் திருநங்கை கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா என்று வெளியாகியிருந்தது.

வடிவேலு வெர்ஷன்

மேலும், விஜய் சேதுபதி சேலையுடன் இருக்கும் இந்தப் போஸ்டரைக் கொண்டு ரசிகர்கள் வடிவேலு வெர்ஷனையும் உருவாக்கி அதனை வெளியிட்டுள்ளனர். தற்போது இந்தப் போஸ்டரும் வைரலாகி வருகிறது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.