Skip to main content

வெள்ளம் காரணமாக கேரளாவில் மருத்துவ சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு

மருத்துவ சேர்க்கை

கேரள மாநிலத்தில் பல்வேறு கல்லூரிகளில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கு தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நுழைவு தேர்வு ஆணையர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆகஸ்ட் 19 தேதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 23 தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சாரா பிற படிப்புகளுக்கு தேர்வு பெறும் மாணவர்கள் ஆகஸ்ட் 30 வரை கல்லூரிகளில் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட ஒதுக்கீட்டிற்கு பிறகு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேல்படிப்பு ஆலோசனை கூட்டம்  திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி பழைய அரங்கில் ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெறும்.

https://www.kerala.gov.in/ என்ற இணையதளத்தில், இந்த ஆலோசனை கூட்டத்திற்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Medical Admission Timeline Extended in Kerala due to floods

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.