Skip to main content

வாட்சப்பில் இனி குழு அழைப்புகள் !!!

வாட்சப்

வாட்சப் செயலி தனது பயன்பாட்டில் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது, பயனர்கள் குழு குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய வாட்சப் அனுமதிக்கிறது.

"கடந்த சில ஆண்டுகளில், மக்கள் வாட்சப்பில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு வந்தனர். உண்மையில், எங்களது பயனர்கள் நாள் ஒன்றுக்கு 2 பில்லியன் நிமிடங்களுக்கு மேல் இந்த அழைப்புகளில் செலவழிக்கிறார்கள்" என முகநூலுக்கு சொந்தமான வாட்சப் நிறுவனம் ஒரு வலைப்பதிவில் கூறியது. 

தற்போது புதிய பிரதியில், குரல் மற்றும் காணொளி அழைப்புகளில், நான்கு பயனர்கள் வரை ஒரே சமயத்தில் பேசமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட குரல் அல்லது வீடியோ அழைப்பைத் தொடங்கவும், அழைப்பிற்கு மேலும் தொடர்புகளைச் சேர்க்க, மேல் வலது மூலையில் உள்ள புதிய 'பங்கேற்பாளரைச் சேர்' பொத்தானை அழுத்த வேண்டும்.

இந்த புதிய பயன்பாடு ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.