Skip to main content

ஊடகவியலாளர் ராகவ் பாஹலின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

raghav bahl

ஊடகவியலாளர் ராகவ் பாஹலின் அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 

பாஹல், தி க்விண்ட் செய்தித்துறை மற்றும் வலைப்பின்னல் 18 ஆகியவற்றின் நிறுவனர் ஆவார். மேலும் நன்கு அறியப்பட்ட ஊடகத் தொழில் முனைவர் ஆவார்.

வியாழக்கிழமை, வருமான வரித்துறையினர் ஒரு வர்த்தக நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்வதாகக் கூறி, ஊடக வலைத்தளமான தி க்விண்ட் நிறுவனர் ராகவ் பாஹல் உட்பட நான்கு தொழிலதிபர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று, வருமான வரித்துறைச் செய்தியாளர் கூறுகையில், ராகவ் பாஹல், கமல் லால்வானி, அனூப் ஜெயின், அபிமன்யு சதுர்வேதி ஆகிய நான்கு தொழிலதிபர்களின் அலுவலக வளாகத்தில் சோதனைத் தேடலில் ஈடுபட்டதாகக் கூறினார்.

நாங்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்பவர்களைப் பற்றிய தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திரு. பாஹல் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் இருப்பதாகக் கண்டறிந்தோம். மற்ற மூவரும் இதே நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதில் பயன் அடைந்திருக்கின்றனர்.

திரு. பாஹல் அவர்கள் ஆசிரியர்கள் குழுவிற்கு அளிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில், தி க்விண்ட் நிறுவனம் முழுமையான வரிகளுக்கு உட்பட்டது என்றும் மேலும் அனைத்து பொருத்தமான ஆவணங்களையும் வழங்கும் என்றும் கூறினார்.

குழுவுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு மிகுந்த அக்கறை உள்ளது என்று பாஹல் எழுதினார். இன்று காலை நான் மும்பையில் இருந்தபோது, ​​ஒரு டஜன் வருமான வரித்துறை அதிகாரிகள் எனது இல்லத்திற்கு வந்து இறங்கினர். மற்றும் ஒரு குழுவினர் தி க்விண்ட் அலுவலகத்திற்குச் சென்றனர். நாங்கள் ஒரு முழு வரி புகரில்லா நிறுவனமாக இருக்கிறோம், அனைத்து பொருத்தமான நிதி ஆவணங்களையும் வழங்குவோம்.

எனினும், நான் எனது வளாகத்தில் உள்ள ஒருவரைப்பற்றி அதிகாரியிடம் பேசியிருக்கிறேன். அவரிடம், அடுத்தவரின் மிகவும் கடுமையான, உணர்ச்சிபூர்வமான தகவல்களைக் கொண்டிருக்கும் எந்த ஒரு அஞ்சல் மற்றும் ஆவணங்களையோ பார்க்கவோ, எடுக்கவோ கூடாது என்று தான் கோரியிருப்பதாகவும் கூறினார். அவர் அவ்வாறு செய்தால், நாம் மிகவும் வலுவான உதவியை நாடுவோம் என்றும், இவ்வாறு அங்கீகரிக்கப்படாத பிரதிகளை எடுப்பதற்கு தங்களது ஸ்மார்ட்போன்களைத் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தான் அறிவுரைத்ததாகவும் கூறியுள்ளார்.

Income tax raids on properties of  Raghav Bahl, founder of media website "The Quint"

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.