Skip to main content

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்!!!

#WorldWomen'sBoxingChampionship

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இன்று ரஷ்யாவின் உள்ள உலன் உடேயில் தொடங்கவுள்ளது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க குத்துச்சண்டை தொடராக கருதப்படும் "உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின்" 11 வது பதிப்பில், உலகின் சிறந்த பெண் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட உள்ளனர்.

அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் குத்துச்சண்டை வீரர்கள் அடங்கிய பத்து பேர் கொண்ட அணியுடன் இந்தியா இம்முறை களம் காண உள்ளது.

aiba

ஆறு முறை சாம்பியனான இந்தியாவின் மேரி கோம் 51 கிலோகிராம் பிரிவில் இந்தியாவுக்கான வலுவான பதக்க போட்டியாளராக மீண்டும் களமிறங்க உள்ளார்.

முன்னாள் சாம்பியனான மேரி கோமின் சமகாலத்திய போட்டியாளர் சரிதா தேவி, 60 கிலோகிராம் பிரிவில் கடும் போட்டியாளராக இருப்பார் என கருதப்படுகிறது.

World Women's Boxing Championship begins in Russia today

Tamil