Skip to main content

வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள்

வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. வெந்தயம் நீரழிவு நோய் வந்தவர்களுககு ஒரு அருமையான மருந்து என்றே சொல்லலாம். இதில் உள்ள நார்ச்சத்து நம் உடலின் சர்க்கரை அளவை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்க வைக்கிறது. மேலும், இன்சுலின் சுரக்க தேவைப்படும் அமினோ அமிலங்கள் வெந்தயத்தில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது. தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

மருத்துவ குணங்கள் அடங்கிய நிலவேம்புவின் அற்புத பயன்கள்

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும். பசி உண்டாக்கும். உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தருவதோடு உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத்  தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்.

குப்பைமேனி! மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை!

குப்பைமேனி  

ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
 

மண் புழு உரம்

செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள். சுற்றுச்சூழல் கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து இது. மண் புழுக்கள் இதற்கு கைகொடுக்கின்றன. மண் புழு உரம் தயாரிக்க கற்றுக்கொண்டால் கைநிறைய காசு பார்க்கலாம். இது மாயாஜாலம் அல்ல; ரொம்ப சிம்பிள். மண் புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் ஈரோடு கோட்டை சக்தி அபிராமி மகளிர் சுய உதவிக்குழுவினர் கூறியதாவது.

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

நஞ்சில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், தற்போது மாடித்தோட்டம் பரவலாகி வருகிறது. குறிப்பாக மாநகர, நகரப் பகுதிகளில் பரவலாகி வரும் மாடித்தோட்டங்கள் வீடுகளின் காய்கறித் தேவையை கணிசமாக நிறைவு செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், விவசாயம் சார்ந்த ஆர்வமுள்ளோர் எனப் பலரும் மாடித்தோட்டத்துக்கு மாறி வருகின்றனர். மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

பயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரைசல்!

பயறு வகைப் பயிர்களான உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, கொண்டக் கடலை, மொச்சை போன்றவை புரதச்சத்து வழங்கும் இந்திய உணவு வகைகளில் முக்கியத்துவம் வகிக்கிறது. இத்தகைய பயறு வகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கிட தமிழக அரசு வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு தரமான விதையை வழங்கி வருகிறது. கிலோவுக்கு ரூ.25 மானியமும், பெருவிளக்கப் பண்ணைகள் அமைத்திட ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் இடுபொருள் மானியமும், பயிர் வகை நுண்சத்துகள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தில் அதிக காளான் உற்பத்தி முயற்சி

ராமநாதபுரத்தில் புதிய நுட்பத்தை பயன்படுத்தி, இயற்கை வேளாண்மை முறையில் காளான் சாகுபடி துவக்கப்பட்டுள்ளது. தொண்டி அருகே உசிலனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு,65. கடந்த ஏழு ஆண்டுகளாக ராமநாதபுரம் மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில், காளான் வளர்ப்பு குடில்கள் அமைத்து காளான் உற்பத்தி செய்து வருகிறார்.

தாய் தென்னை மரங்களை தேர்ந்தடுக்கும் முறைகள்

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் பெற்று தரும் மரங்களில் தென்னை மரமும் ஒன்று. அந்த தென்னை மரங்களை வளர்க்க தேவைப்படும் தாய் தென்னை மரங்களை தேர்ந்தெடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென்னை வளர்ப்பில் நஷ்டம் ஏற்பட வாய்ப்;பு உண்டு.

வன வளத்தை இழக்கும் தமிழகம்

தமிழகம் தனது வனவளத்தை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெறும் 102 சதுர கி.மீ பரப்பளவுக்கு மட்டும்தான் காடு வளத்தை விரிவுபடுத்தி இருக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

குறைந்த விலையில் களை எடுக்கும் கருவி

விளை நிலங்களில் உழுவை இயந்திரம், கலப்பை போக முடியாத இடங்களில் குறிப்பாக வீட்டு தோட்டம் (குறு விவசாயிகள்) போன்றவற்றில் களைகள் எடுக்க ஒற்றை சக்கரம், கலப்பை இவற்றில் வடிவமைத்து குறைந்த விலைக்கு களை எடுக்கும் கருவிகள் கிடைக்கிறது. நம்முடைய தோட்டத்தை உழுதல், களை எடுத்தல், பாத்தி வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை எவ்வித எரிபொருள், மின்சார செலவு இன்றி மேற்கொள்ளலாம்.

Subscribe to விவசாயம்