Skip to main content

பிசிசிஐ புதிய தலைவர் கங்குலிக்கு - அமுல் நிறுவனம் வெளியிட்ட டூடுல்!

அக்டோபர் 23 ஆம் தேதி பிசிசிஐ தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் இந்திய கிரிக்கெட்டின் கவுன்சிலின் இந்த உயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் கங்குலி என்பதால், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி புதிய பிசிசிஐ தலைவரானதை தொடர்ந்து பலர் இந்த நிகழ்வை கொண்டாடி வரும் நிலையில், கங்குலிக்கு வாழ்த்து தெரிவிக்க அமுல் இந்தியா ஒரு டூடுலை அர்ப்பணித்துள்ளது.

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர்!

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. 

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

மத்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலிக்கு வாய்ப்பு!

மத்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. 

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி, பிசிசியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

பிசிசிஐயின் தலைவர் மற்றும் பிற பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கங்குலிக்கு பெரும்பாலான நிர்வாகிகள் மத்தியில் ஆதரவு காணப்படுகிறது. இதனால், கங்குலி அப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.  

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டம்: இந்தியா 502 ரன்களில் டிக்ளேர்!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களம் இறங்கினார். மயங்க் அகர்வால் இந்திய மண்ணில் தொடக்க வீரராக முதல் முறையாக ஆடினார். இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 4-வது சதத்தை பதிவு செய்தார்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர்!!!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இன்று ரஷ்யாவின் உள்ள உலன் உடேயில் தொடங்கவுள்ளது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க குத்துச்சண்டை தொடராக கருதப்படும் "உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின்" 11 வது பதிப்பில், உலகின் சிறந்த பெண் குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டு போட்டியிட உள்ளனர்.

அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் குத்துச்சண்டை வீரர்கள் அடங்கிய பத்து பேர் கொண்ட அணியுடன் இந்தியா இம்முறை களம் காண உள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிபிஎல் தொடர்: பிரிஸ்பேன் அணியில் ஏபி டிவில்லியர்ஸ் ஒப்பந்தம்!

தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணியில் இணைந்ததன் மூலம் பிக் பாஷ் லீக் தொடர், அதன் மிகப்பெரிய கையொப்பங்களில் ஒன்றைப் பெற்றுள்ளது.

அவர் 2019-20 சீசனுக்கான குயின்ஸ்லாந்து உரிமையில் சேரப்போவதாக ட்விட்டரில் ஏபி டிவில்லியர்ஸ் பதிவிட்டார்.

“பிக் பாஷ் தொடரில், பிரிஸ்பேன் ஹீட்டிற்காக கையெழுத்திட்டதில் மிகவும் மகிழ்ச்சி. சிறந்த அணி, சிறந்த நகரம். ” என ஏபி டிவில்லியர்ஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹாக்கி தொடர்: 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்திய அணி முன்னிலை!

பெல்ஜியம் நாட்டில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது.

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் நடந்த ஹாக்கி தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்தது. 

39 மற்றும் 54 வது நிமிடங்களில் மந்தீப் மற்றும் ஆகாஷ்தீப் கோல் அடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 எனும் கணக்கில் முன்னிலையில் உள்ளது 

தொடரின் இரண்டாவது போட்டி நாளை செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இலங்கைக்கு எதிரான T20 தொடர் - அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ!

இந்தியா-இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா-இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் என அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் ஜிம்பாப்வே அணியின் சர்வதேச அங்கீகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்காலிகமாக ரத்து செய்தது. 

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது டி20: இந்தியா வெற்றி

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் இரண்டு விக்கெட்டும் சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித் தொடர்ந்து முதலிடம்!!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதால், இந்திய அணி கேப்டன் கோலி தொடர்ந்து 2 வது இடத்தில் உள்ளார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பின்னால் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

Subscribe to விளையாட்டு