Skip to main content

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணத்தை வெப் சீரிஸாக இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.

ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்!

குயின் என பெயரிடப்பட்டுள்ள இதில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் ஜெயலலிதாவின் பதின் பருவ காட்சிகளில் தோன்றுகிறார்.

18-30 வயதான கதாப்பாத்திரத்தை நடிகை அஞ்சனாவும், அதனை தொடர்ந்து ஜெயலலிதா ரோலில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஏற்று நடிக்கிறார்.

"எனை நோக்கி பாயும் தோட்டா" - வெளியாவதில் மீண்டும் தாமதம்!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "எனை நோக்கி பாயும் தோட்டா"திரைப்படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இப்படம் நாளை வெளியாகாது என சென்னை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கதாநாயகன் இடையில் பனிப்போர் உருவாகியுள்ளது. தனுஷ் பேசிய சம்பள பேச்சு இப்போது சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது. சம்பளமே தராமல் பலர் ஏமாற்றுகிறார்கள் என்று சமீபத்தில் தனுஷ் பேசிய பேச்சுதான் இன்றைக்கு ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.

இந்நிலையை கடன் பிரச்சனை காரணமாக இப்படம் நாளை வெளியாக கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

"தல 61" - புதிய அப்டேட்!!!

அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் அஜித் நடிப்பில் "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்பில் வெளியாகி வெற்றி அடைந்தது. 

இப்படத்தை போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது. 

இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அதிரடி சண்டை படமாக உருவாக்க உள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா!

மணிரத்தினம் இயக்கவுள்ள "பொன்னியின் செல்வன்" படத்தில் த்ரிஷாவும் இணைந்துள்ளார்.

கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். 

ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

 

சிங்கப்பூரில் நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை!

கடந்த ஆண்டு மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் தத்ரூபமாக ஸ்ரீதேவியின் மெழுகு சிலை ஒன்றை வடிவமைத்துள்ளது.

 

sridevi wax statue

 

இந்த சிலை உருவாக்கம் பற்றிய வீடியோ ஒன்று மேடம் துசாட்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

திரைக்கு வர காத்திருக்கும் கோலிவுட் படங்கள்!

தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாமுனி Vs எனை நோக்கி பாயும் தோட்டா

ஆர்யாவின் மகாமுனி, நடிகர் தனுஷ் நடிப்பில் "எனை நோக்கி பாயும் தோட்டா", யோகிபாபுவின் ஜாம்பி ஆகிய 3 படங்களும் செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது.

மகாமுனியில் ஆர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார். 

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா திரை ஆந்திராவில் திறப்பு!

கியூப் சினிமா தனது முதல் EPIQ திரையை ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டையில் அறிமுகப்படுத்தியது. 

100 அடி அகலம் மற்றும் 80 அடி உயரம் கொண்ட இந்த திரையை, தெலுங்கு நடிகர் ராம் சரண் அறிமுகப்படுத்தினார், இது தெற்காசியாவில் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.

திறக்கப்பட்டவுடன் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த சாஹோ திரைப்படம் முதலில் திரையிடப்பட்டது.

 

EPIQ

 

சிக்ஸர் படக்குழுவினருக்கு கவுண்டமணி நோட்டீஸ்!

பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி நடித்திருப்பார்.

அப்படத்தில் அவருக்கு மாலை கண் நோய் இருக்கும், மாலையில் கண் தெரியாதவராக நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. 

அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து தற்போது "சிக்சர்" என்ற பெயரில் புதிய படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது.

சாச்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் வைபவ், பல்லக் லாவாணி ஆகியோர் நடித்துள்ளனர். 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandwithDHANUSH ‍!!!

"தனுஷ் நடிக்கும் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நிறுத்த வேண்டும்" என்று தயாரிப்பாளரும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான அழகப்பன் கூறியுள்ளார். 

இதனால் கோபம் அடைந்த தனுஷ் ரசிகர்கள், #WeStandwithDHANUSH எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

"அசுரன்" இசை வெளியீடு

ஆகஸ்ட் 28 அன்று, வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் "அசுரன்" திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. 

முன்கூட்டியே வெளியாகும் பிகில் ‍- எப்போது?

அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் படம் தயாராகி உள்ளது.

படப்பிடிப்பு இறுதி நாளில் துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 400 பேருக்கு தங்க மோதிரங்களை அவர் பரிசாகவும் வழங்கினார். இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

Subscribe to சினிமா