Skip to main content

தர்பார் திரைப்படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்!

லைகா நிறுவனம் தயாரித்து வரும் "தர்பார்" #darbar படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் (Rajinikanth) இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

அவர் காவலர் சீறுடையில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் ஸ்ரேயா சரண், யோகி பாபு, நிவேதா தாமஸ், உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பேட்ட படத்தின் "மரண மாஸ்" பாடல் புதிய சாதனை !!!

ரஜினி நடிப்பில் வெளியான "பேட்ட" திரைப்படத்தின் "மரண மாஸ் பாடல்" 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது. இதனால் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் பேட்ட திரைப்படத்தின் வெற்றி பிளாக்பஸ்டர் வெற்றியாக மாறியது. 

சமீபத்தில், பேட்ட படத்தில் இருந்து வெளியான "மரண மாஸ்" எனும் அறிமுக பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது.

இது தொடர்பாக "பேட்ட திரைப்படத்தின்" இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிகில் கதை திருடப்பட்டதா? ‍- வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது, படத்தை தீபாவளி நாளில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் படம் "பிகில்". 

யாருடைய கதை?

இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

அனிருத் வெளியிட்ட "தர்பார்" திரைப்படத்தின் புதிய அப்டேட்!!!

இன்று இசையமைப்பாளர் அனிருத் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

தனது பிறந்த நாள் விழாவை ரஜினி நடிப்பில் உருவாகி வரும் "தர்பார்" அப்டேட்டுடன் தொடங்கினார் அனிருத். வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாக உள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் "தர்பார்" #darbar படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான ‘பேட்ட' படத்திற்கு இளம் இசை அமைப்பாளர் அனிருத் முதல் முறையாக ரஜினி படத்திற்கு இசை அமைத்தார்.

தீபாவளி நாளில் திரைக்கு வரும் பிகில் ‍திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!!!

அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது, படத்தை தீபாவளி நாளில் வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவர காத்திருக்கும் படம் "பிகில்". 

இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் பெறுவதற்காக இரண்டு நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். 

இலங்கையின் உண்மை கதையை தழுவிய "ஒற்றைப் பனைமரம்"!

ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். 

இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, "ஒற்றைப் பனைமரம்" என்ற தலைப்பில் இப்படம் தயாராகி இருக்கிறது.

40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, 17 விருதுகளை வென்ற படம், இது. இதில், முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.

அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

யோகி பாபுவின் மாறுபட்ட நடிப்பில் "காவி ஆவி நடுவுல தேவி"!

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ள புகழ்மணி, "காவி ஆவி நடுவுல தேவி" என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். 

இதில், யோகி பாபு 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார். 

இந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார். 

இவர்களுடன் தம்பிராமய்யா, இயக்குனர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் தேதி வெளியீடு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. 

ஆனால், சிலர் அவர்களுக்குள் திருமணம் நடந்துவிட்டது அதனால் தான் ஒன்றாக வசிக்கிறார்கள் என்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நயன்தாராதான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டதாகவும் செய்திகள் வருகின்றன.

"அரசியலிலிருந்து விலகி இருங்கள்" - கமல், ரஜினிக்கு சிரஞ்சீவி அறிவுரை!

அரசியலிலிருந்து விலகி இருங்கள் என்று கமலுக்கும் ரஜினிகாந்துக்கும் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அறிவுரை வழங்கி உள்ளார். 

நீங்கள் அரசியலில் இருக்க நினைத்தால் தோல்விகள், ஏமாற்றங்கள், அவமானங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆனால் ரஜினியும், கமலும் தொடர்ந்து அரசியலில் இருந்து மக்களுக்கான உழைக்க வேண்டும் என தீர்மானித்து விட்டால், அனைத்து சவால்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையால் அவற்றை கையாள்வார்கள் என்று நம்புகிறேன். சமீபத்திய லோக்சபா தேர்தலில் கமல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், துரதிஷ்டவசமாக வெற்றி கிடைக்கவில்லை. 

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு "தாதா சாகேப் பால்கே விருது"!!

இந்தியாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் திரைப்படத் துறையில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக, நாட்டின் மதிப்புமிக்க "தாதா சாகேப் பால்கே" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"இரண்டு தலைமுறைகளாக ரசிகர்களை மகிழ்வித்து ஊக்கமளித்த இந்தியாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் "தாதா சாகேப் பால்கே" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக" தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்வீட் செய்துள்ளார்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இந்திய நாடும், சர்வதேச திரைப்பட கலை சமூகமும் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் தெரிவித்தார். 

Subscribe to சினிமா