Skip to main content

அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகாவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் புயல் எதிர்ப்பு அமைப்பு தெற்கில் பருவமழை தொடங்குவதற்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anticyclone (ஒரு சூறாவளிக்கு எதிரானது) என்பது ஒரு வானிலை நிகழ்வு ஆகும், இது உயர் வளிமண்டல அழுத்தத்தின் மையப் பகுதியைச் சுற்றியுள்ள பெரிய அளவிலான காற்றோட்டமாக வரையறுக்கப்படுகிறது.

கோவையில் அரங்கேறிய "சென்னையில் ஒரு நாள்"!!!

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது முக்கிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஒன்பது பேர் புத்துயிர் பெற்றுள்ளனர்.

18 வயதான ராம்குமார் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். 

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி அவருக்கு விபத்து ஏற்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், முதலுதவி அளிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சைக்காக கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனைக்கு (கே.எம்.சி.எச்) கொண்டு செல்லப்பட்டார்.

சசிகலா முன்கூட்டி விடுதலை ஆவதில் சிக்கல் ‍‍- சிறை விதிகளை மீறியது அம்பலம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாகவும், சிறை விதிகளை மீறி அவர் வெளியே சென்றதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

நீட் ஆள்மாறாட்டம் மோசடி: மாணவர்களின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவர்கள் தேனி நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

மாணவர்கள் பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோர்களது ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதி பன்னீர்செல்வம், "இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான புகார்தாரர் யார்? என இதுவரை கண்டறியப்படவில்லை. 

மாணவர்கள் படிக்கும் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கமிட்டி உறுப்பினர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை. புரோக்கர் ரஷித்தை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?

நீட் ஆள்மாறாட்டம்: மேலும் ஒரு சென்னை மாணவி கைது!

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை, சவிதா மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி பிரியங்கா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. அவர் தற்போது விசாரணையில் உள்ளார்.

2019 ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் உதித் சூர்யா, பிரவீன், ராகுல் மற்றும் அவர்களது தந்தையர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
 
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர் இர்பான், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

 

தமிழக பாரம்பரிய உடையில் தோன்றிய இந்திய பிரதமர்!!!

சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் சந்தித்து பேசினர்.
 
இதற்காக கோவளம் கடற்கரை பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கி சென்றார். 

மாமல்லபுரத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடி தமிழகத்தின் பாரம்பரிய வேட்டி, சட்டை மேல் துண்டு உடையுடன் தோன்றினார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வந்து சேர்வதற்கு சிறிது நேரம் முன்னதாக மாமல்லபுரம் சிற்பங்களை மோடி சற்று நேரம் சுற்றிப்பார்த்தார். கோவளம் ஓட்டலில் சீன அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மனு!

சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு தங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடக் கோரியுள்ளார்.

மேலும், அந்த மனுவில் சுபஸ்ரீயின் இறப்பை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைக்கவும், பேனர் வைப்பதை தடுக்க கடுமையான சட்டம் இயற்றவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பந்தலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் எழுதிய பதில் கடிதம்!

இந்தியாவின் "இஸ்ரோ" விண்வெளி மையம் கடந்த செப்டம்பர் மாதம் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பியது. 

தரையிறங்க 2½ கி.மீட்டர் தூரத்தில் இருந்தபோது லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

உலகமே மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில் இந்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையேயான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு!!!

இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையே முறைசாரா உச்சிமாநாடு தமிழத்தின் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முதன்முதலாக முறைசாரா உச்சிமாநாட்டில் சீனாவின் வூகன் நகரில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28-ந் தேதி சந்தித்து பேசினர்.

அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது இரண்டாவது முறைசாரா உச்சிமாநாடு நமது தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

நீட் ஆள்மாறாட்டம்: மாணவி அபிராமி குற்றவாளியா? இல்லையா?

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் மாணவன் உதித்சூர்யா உள்பட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களின் தந்தையும் கைதாகி சிறையில் உள்ளனர்.

சென்னை கல்லூரியில் படித்து வந்த மாணவி அபிராமி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மட்டும் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

மாணவி அபிராமியின் சான்றிதழ் போட்டோவில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மாணவியை அழைத்து விசாரணை நடத்தினர். 

Subscribe to தமிழகம்