Skip to main content

நகர்ப்புற தெரு விற்பனை மாதிரி திட்டம்: கோவை நகரம் தேர்வு!

மாதிரி "நகர விற்பனை திட்டத்திற்காக" கோவை மற்றும் மதுரை நகரங்களை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தேர்ந்தெடுத்துள்ளது.

தமிழகத்தில் ஒரு சில நகரங்களுக்கு பயணம் செய்த பின்னர், நகர்ப்புற தெரு விற்பனையாளர்கள் திட்ட மாதிரிக்காக கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நகர்ப்புற வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்கும் திட்டத்திற்கு மதுரை மற்றும் திருச்சி நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இரண்டு திட்டங்களும் அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வருகின்றன (Deendayal Antyodaya Yojana).

2022 ஆண்டு வரை மாணவ தேர்ச்சி நிறுத்தி வைக்கப்ப‌டாது ‍- செங்கோட்டையன்!!!

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. 

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி கமல் கருத்து!!!

தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
இதுபற்றி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்தை தெரிவித்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

இந்த மழை வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சுபஸ்ரீக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

சென்னை பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்தது. 

இதில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். பேனர் சரிந்து விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னையில் கட் அவுட் விழுந்து இளம்பெண் பலி!!!

சென்னை பள்ளிக்கரணையில், சாலை நடுவே வைக்கப்பட்ட அதிமுக கட்சி பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 23 வயது இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.  

chennai banner

 

சென்னை ஆலைத் தொழிலாளர்களுடன் யமஹா ஊதிய தீர்வு ஒப்பந்தம்!!!

இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் (IYM) வியாழக்கிழமை சென்னை தொழிற்சாலையில் தனது தொழிலாளர்களுடன் மூன்று ஆண்டு ஊதிய தீர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் 2019 ஏப்ரல் 1 முதல் பின்னோக்கி அமல்படுத்தப்படும், மேலும் இது வரும் 2022 மார்ச் 31 தேதி வரை அமலில் இருக்கும் என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் இது தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இதை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் தாக்குதல்!!!

ராமேஸ்வரம்: சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது இந்திய கடலோர காவல்படையினரால் கடுமையாக தாக்கப்பட்டதாக தமிழக மீனவ குழுவை சேர்ந்த சிலர் குற்றஞ்சாட்டினர்.

மண்டபம் பகுதிக்கு உட்பட்ட கடலோர காவல்படை தளபதி, ஜி மணி குமார், குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

​​வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் கொண்ட கடலோர காவல்படை குழு, மீனவர்களிடம் முறையான அடையாள அட்டைகள் இல்லாததால் அவர்களை கரைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

சத்குருவின் "காவிரி அழைப்பு" ‍‍- மோட்டார் சைக்கிள் பேரணி!!!

காவிரி நதிநீர் இணைப்பிற்கான சத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்டம்பர் 11 ஆம் தேதி துவங்கியது.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு தனது மோட்டார் சைக்கிள் பேரணியை ஓசூரில் புதன்கிழமை தொடங்கினார். 

242 கோடி மரங்களை நட்டு, காவிரி புத்துயிர் பெறுவதன் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் ஒரு முயற்சியான "காவிரி நதிநீர் அழைப்பு" ஆதரவைப் பெறுவதற்காக அவர் தர்மபுரிக்கு சென்றார். 

அங்கு, உயர்கல்வி அமைச்சர் கே பி அன்பழகன் மற்றும் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி ஆகியோர் சத்குருவை வரவேற்றனர்.

பொங்கல் 2020: தமிழகத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது. 
சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள், குடும்பம் குடும்பமாக பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். 

இதனால், ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்வார்கள். 

தற்போது ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டடுள்ளது.
 
இந்நிலையில் அடுத்த ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று செப்டம்பர் 12 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியது. 

Subscribe to தமிழகம்