Skip to main content

சவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி "கூட்டு பதில்"

சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவல்கள் மீதான ட்ரோன் தாக்குதல்களுக்கு "கூட்டு பதில்" அளிக்குமாறு பிரிட்டனும் ஜெர்மனியும் செவ்வாய்க்கிழமை சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஜெர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் தொலைபேசி உரையாடலின் போது தாக்குதல்களைப் பற்றி விவாதித்தனர்.

"சர்வதேச நாடுகளுடன் இணைந்து, ஒரு கூட்டு பதிலை அளிக்க வேண்டியதன் அவசியம்" பற்றி விவாதித்தனர்.

அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஆலையான அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் எண்ணெய் வயல் மீது கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி அதிகாலை ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
 
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து நாசமானது.

எண்ணெய் உற்பத்தி பாதிப்பு:

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித் தொடர்ந்து முதலிடம்!!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதால், இந்திய அணி கேப்டன் கோலி தொடர்ந்து 2 வது இடத்தில் உள்ளார்.

செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பின்னால் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

சவுதியில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!!!

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் பகுதியில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த தாக்குதலால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மலேரியாவை தடுக்க தடுப்பூசி முறையை கையாளும் 3 வது ஆப்பிரிக்க நாடு!!!

ஆப்பிரிக்கா நாடுகளான மலாவி மற்றும் கானாவுக்குப் பிறகு, மலேரியா நோயை தடுக்க தடுப்பூசியை அறிமுகப்படுத்திய மூன்றாவது ஆப்பிரிக்க நாடாக கென்யா உருவெடுத்துள்ளது. 

மூன்று நாடுகளில் ஆண்டுக்கு சுமார் 360,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

கென்யாவில் உள்ள சுகாதார அதிகாரிகள், கிராமப்புறங்களில் அதிக அளவில் மலேரியா பரவுவதை தடுக்க சிறு குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ்: ஆகஸ்ட் மாத விற்பனை 32 சதவீதம் சரிவு!!!

ஆகஸ்ட் மாதத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் உட்பட அனைத்து வாகனங்களும் உலக விற்பனையில் 32 சதவீத சரிவை கண்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1,07,030 யூனிட்களை விற்றது.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 72,464 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், வணிக வாகனங்கள் மற்றும் டாடா டேவூ வரம்பின் உலகளாவிய மொத்த விற்பனை அலகுகள் கடந்த மாதம் 25,366 ஆக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 45,719 யூனிட்டுகளில் இருந்து 45 சதவீதம் குறைந்துள்ளது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

வாக்கெடுப்பு காரணமாக - கனடா பாராளுமன்றம் கலைப்பு!!!

கனடா பாராளுமன்றத்திற்கு வரும் 21-10-2019 அன்று நாடுதழுவிய அளவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் டுருடேயு, அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட்-ஐ இன்று சந்தித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு பரிந்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து  ஜஸ்டின் டுருடேயுவின் முடிவுக்கு கவர்னர் ஜெனரல் ஜூலி பயேட் இன்று ஒப்புதல் அளித்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.

Canada PM Justin Trudeau dissolves parliament, begins reelection bid ahead of October 21 vote

வணிக யுத்தம்: அமெரிக்க பொருட்களுக்கு சீனா வர்த்தக சலுகை!!!

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக வர்த்தக போர் நீடித்துவருகிறது.
 
இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருட்களுக்கும், எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பாக இருநாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகாததே இதற்கு காரணம். இதனால் இருநாடுகளும், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரி விதித்து வருகின்றன.

அதிபர் டிரம்ப் "என்னை நேசிக்கிறார்" - அர்னால்ட் கேலி!!!

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றபோதும் டிரம்ப்புக்கும், அர்னால்டுக்கும் இடையே கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

ஜம்மு மக்களுக்கு ஆதரவாக - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இம்ரான் கான் பேரணி!!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42-வது கவுன்சில் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்மூத் ஷா குரேஷி, "ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பிரச்சனை இந்தியாவின் உள்விவகாரம் அல்ல, இது சர்வதேச அக்கறை கொண்ட  பிரச்சனை.

ஜம்மு காஷ்மீரில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என கூறினார்.

Subscribe to உலகம்