Skip to main content

Breaking news

தொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்!

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில், எல்.ஈ.டி தொலைக்காட்சிகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் திறந்த செல் டிவி பேனலை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட ஐந்து சதவீத தனிபயன் வரியை மத்திய அரசாங்கம் நீக்கியுள்ளது.

இந்த நடவடிக்கை டிவி பேனலின் விலையை சுமார் மூன்று சதவீதம் குறைக்க உதவும்.

லிக்விட் கிரிஸ்டல் டிஸ்ப்ளே (LCD - Liquid Crystal Display) மற்றும் லைட் எமிட்டிங் டையோடு (Light Emitting Diode) டிவி பேனல் தயாரிப்பில் பயன்படுத்த திறந்த செல்லுக்கு (15.6 இன்ச் மற்றும் அதற்கு மேல்) வரி விலக்கு அளிக்கப்படுகின்றது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு!

கோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் 2 நாட்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள கோவளம் மற்றும் மாமல்லபுரத்தில் அக்டோபர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல்வேறு துறைகளில் கடும் போட்டியாளர்களாக உள்ளன.

இந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (செப்டம்பர் 18) தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று மாநில செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மம்தா பானர்ஜி செப்டம்பர் 17 ஆம் தேதி புதுடெல்லிக்கு புறப்படுவார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாட வாய்ப்புள்ளது.

2020 ஆண்டில் தொழில் துவங்கும் வணிகர்களுக்கு - ஜிஎஸ்டி புதிய அறிவிப்பு !!!

ஜனவரி 2020 ஆண்டு முதல் தொழில் துவங்கும் புதிய வணிகர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் தேவை என சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் தலைவரான அமைச்சர் சுஷில் குமார் மோடி கூறியதாவது: 

புதிய வியாபாரிகளுக்கு ஆதார் அங்கீகாரம் என்பது தற்போது வரை அவரவர் விருப்பமாக உள்ளது, இனி வரும் 2020 ஆம் ஆண்டு முதல் இது கட்டாயமாக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், போலி விலைப்பட்டியல்கள் உருவாக்கப்பட்டு பல பொய் கணக்குகள் ஏமாற்ற பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி: மத்திய பிரதேசத்தில் 46,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!!!

மத்திய பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் மாண்ட்சர் மற்றும் நீமுச் மாவட்டங்களைச் சேர்ந்த 46,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இந்தூர் உட்பட 10 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு அண்டை மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து, உயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

போர் நிறுத்த ஒப்பந்தம் ‍விதிமீறல்: பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு!!!

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், 2003-ம் ஆண்டு போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 
2,050 முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பாகிஸ்தான் மீது இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

சவுதியில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!!!

சவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் பகுதியில் உள்ள எண்ணெய் வயலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த தாக்குதலால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சரண் மனு தள்ளுபடி!!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

சிதம்பரத்தின் இந்த மனுவை சிறப்பு நீதிபதி அஜய்குமார் குஹார் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
 
சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.

இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க  விரும்பவில்லை எனவும், தேவைப்படும்போது அமலாக்கத்துறை காவலுக்கு விண்ணப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

உயிரிழந்த சுபஸ்ரீக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!!

சென்னை பல்லாவரம் அருகே சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் நடுவே வைக்கப்பட்ட பேனர் அவர் மீது விழுந்தது. 

இதில் நிலைகுலைந்து விழுந்த சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் டேங்கர் லாரியில் சிக்கி உயிரிழந்தார். பேனர் சரிந்து விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சென்னையில் கட் அவுட் விழுந்து இளம்பெண் பலி!!!

சென்னை பள்ளிக்கரணையில், சாலை நடுவே வைக்கப்பட்ட அதிமுக கட்சி பேனர் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 23 வயது இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.  

chennai banner

 

Subscribe to Breaking news