Skip to main content

2022 ஆண்டு வரை மாணவ தேர்ச்சி நிறுத்தி வைக்கப்ப‌டாது ‍- செங்கோட்டையன்!!!

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். இது நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. 

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பற்றி கமல் கருத்து!!!

தமிழக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 
இதுபற்றி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது கருத்தை தெரிவித்தார்.

தமிழகத்தில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு - தலைமைச் செயலாளர் ஒப்புதல்!

தமிழக உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நடத்துவதைப் போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தமிழக தலைமைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார்.

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை - ஓர் வழிகாட்டி!!!

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிக்குள் நுழையும் 82 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

இந்த உதவித்தொகையை எவ்வாறு பெறுவது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

யார் விண்ணப்பிக்க வேண்டும்?

ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி!

இந்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு வரும் மே 31, 2020 ம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், தற்போது அதில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிப்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ஆறு மாத காலம் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி காலங்களில் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை பயணம்!

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏழு நாட்கள் பின்லாந்து நாட்டிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உலகிலேயே கல்வி முறையில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டின் கல்வி நிலையங்களை அவர் இன்று பார்வையிட்டது மட்டுமல்லாமல், கல்வித்துறை அதிகாரிகளுடன் அவர்கள் உபயோகிக்கும் கல்வி கற்றல் நடைமுறை குறித்து கலந்துரையாடினார்.

நாசாவிற்கு செல்லும் மதுரை மாணவி ‍!!!

மதுரை கள்ளந்திரியை சேர்ந்தவர் ஜாபர் ஹுசைன். இவர் அப்பகுதியில் தேநீர் கடை நடத்திவருகிறார்.

இவரது மகள் தான்யா தஷ்ணம் வயது 15. இவர் மதுரையில் உள்ள மஹாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது தாயார் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அறிவியல் பாடத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட தான்யா தஷ்ணம் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்களை முன்மாதிரியாக கொண்டுள்ளார்.

சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டி

தமிழகத்தில் இன்று முதல் "கல்வி தொலைக்காட்சி"!

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழ்நாடு மாநில அரசின் புதிய தொலைக்காட்சி சேனலான "கல்வி தொலைக்காட்சி"யை துவங்கிவைத்துள்ளார்.

மக்களுக்கு தெரியாத பல்வேறு அரசு திட்டங்கள், கல்வி பாடம் சார்ந்த பயிற்சிகள், குழு தேர்வு தயாரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும் இந்த தொலைக்காட்சியில் இடம்பெறும்.

பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்ட இந்த சேனலில் பெரும்பாலும் குழந்தைகளுக்கான கல்வி நிகழ்ச்சிகள் இருக்கும்.

நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணிவரை ஒளிபரப்பப்படும்.

நீட் 2020 : மே 3-இல் தேர்வு - எப்போது விண்ணப்பிக்கலாம்?

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான, 2019- 2020-ம் கல்வி ஆண்டின் நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டு, மே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4 ஆம் தேதி வெளியிடப்படும். 

இந்த தேர்வுக்கு வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் இணையதள முகவரியை அணுகவும்,

https://nta.ac.in/

'ஏசி' வகுப்பறை! அசத்தும் அரசுப் பள்ளி!

நாகையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் 'ஏசி' வகுப்பறை வசதியை கிராம மக்களே ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

Subscribe to கல்வி