Skip to main content

முதல்வரின் அடுத்த வெளிநாட்டு பயணம் - இஸ்ரேல்!!!

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

தனது 14 நாள் பயணத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய அவர், தனது அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து அறிவித்துள்ளார்.

தனது அடுத்த பயணம் இஸ்ரேலுக்கு எனவும், அந்த நாட்டில் பின்பற்றப்படும் திறமையான நீர் மேலாண்மை நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளவே இந்த பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் திரும்பினார் முதல்வர்!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டவர் பலரும் ஆர்வத்தில் உள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

முதலில் இங்கிலாந்து, அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாங்குநேரி சட்டசபை தொகுதி:

பாராளுமன்ற தேர்தலின் போது திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எச். வசந்தகுமார், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதி:

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பதவியேற்பு விழா - எங்கே? எப்போது?

தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவர் திருமதி தமிழிசை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கிய நியமன வாரண்டை தெலுங்கானாவின் குடியுரிமை ஆணையர் பவன் வேதாந்தம் கிரியிடமிருந்து தனது சாலிகிராம் இல்லத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பெற்றார். 

செப்டம்பர் 8 ஆம் தேதி தமிழிசை பதவியேற்க வாய்ப்புள்ளது. பதவியேற்பு விழா காலை 11 மணிக்கு நடைபெறும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது இல்லத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு மீண்டும் தனது நன்றியை தெரிவித்தார். 

தமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க அமைச்சர் காமராஜ் வலியுறுத்தல்!

தமிழகத்திற்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க தமிழக உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுபாடு அமைச்சர் ஆர். காமராஜ் மத்திய அரசிடம் வலியுறுத்தல்.

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கி வரும் வழக்கமான மண்ணெண்ணெய் அளவீட்டில் இருந்து தற்போது 24 சதவீதம் குறைத்து உள்ளது. 

இந்த நிலையில்  தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லியில் சந்தித்தார்.

அப்போது தமிழகத்துக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் இருந்து நாளை அமெரிக்கா செல்கிறார் தமிழக முதல்வர்!

இங்கிலாந்தின் சபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச்- ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்றார். 

அங்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின் உற்பத்தி கட்டமைப்புகளை அவர் பார்வையிட்டார்.

மின்சாரத்தை மின் கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களிடம் விரிவாக விவாதித்தார்.  

ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டம்: திமுக தலைவருக்கு அழைப்பு!

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.

ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அழைக்கப்பட்டுள்ளார்.

அரசு முறை பயணமாக இங்கிலாந்து செல்கிறார் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளில் வரும் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 

முதலமைச்சரின் இந்த பயணத் திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுவாக பிரதமர் வெளிநாடு செல்லும் போது முக்கிய முடிவுகள் எடுக்கும் பொறுப்புகளை தனக்கு அடுத்த நிலையில் உள்ள அமைச்சரிடம் ஒப்படைத்துச் செல்வார். அதேபோல, மாநில முதல்வர்களும் வெளிநாடு செல்லும் போது, மூத்த அமைச்சரிடம் பொறுப்புகளை ஒப்படைத்துச் செல்வார்கள்.

அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, அ.தி.மு.க.வில் 5 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரிசெய்யுங்கள்: ரஜினிக்கு ஜெயக்குமார் அறிவுரை

சென்னை, காவிரி நீரை தரமறுக்கும் கர்நாடகாவில் முதலில் சிஸ்டத்தை சரி செய்யுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Subscribe to அரசியல்