Skip to main content

மாடித் தோட்டம் அமைப்பது எப்படி?

மாடித் தோட்டம் என்றவுடன் நம் நினைவில் இருப்பது மேற்கூரை (காங்கிரீட்) பாதுகாப்பாகும் . மேற்கூரையை பாதுகாப்பதற்கு கடைப்பிடிக்க வேண்டிய வழிகள்.

மாடியில் உள்ள தளத்தில் இரப்பர் கோட் பெயிண்ட் அடிக்க வேண்டும்.

அதிக கனம் இல்லாத ஜாடிகள், மண் தொட்டி என்றால் டெரகோட்டா மண் தொட்டி, மாடித் தோட்டத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள், ப்ளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட பெயிண்ட் வாளிகள் இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

“வீட்டுத்தோட்டம் அமையுங்கள் இப்படி!”

நஞ்சில்லாத காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில், தற்போது மாடித்தோட்டம் பரவலாகி வருகிறது. குறிப்பாக மாநகர, நகரப் பகுதிகளில் பரவலாகி வரும் மாடித்தோட்டங்கள் வீடுகளின் காய்கறித் தேவையை கணிசமாக நிறைவு செய்து வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள், இல்லத்தரசிகள், விவசாயம் சார்ந்த ஆர்வமுள்ளோர் எனப் பலரும் மாடித்தோட்டத்துக்கு மாறி வருகின்றனர். மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வல்லுநர்கள் கூறிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

மகத்தான லாபம் தரும் குமிழ் மரம் வளர்ப்பு

குமிழ் மரத்தின் விஞ்ஞானப் பெயர் மெலைனா அர்போரியா ஆகும். இது வெர்பினேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. ஜெர்மானிய அறிவியல் அறிஞர் ஜோஹான் ஜார்ஜ்மேலைன என்பவரை நினைவூட்டும் வகையில் மெலைனா என்ற முதற்பெயரை கொண்டது. அர்போரியா என்பது மரத்தைப் போன்றது எனப் பொருளாகும். குமிழ்மரத்தின் தாயகம் பாரசீகமாகும்.இம்மரம் பொதுவாக இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா, பர்மா, பங்களாதேசம், தென்சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.நம் நாட்டில் இராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. ஈரச் செழிப்பான பகுதிகளில் வேகமாக நன்கு வளர்கிறது.

களையை கட்டுப்படுத்த நிழற்போர்வை

தர்மபுரி மாவட்டத்தில், நிலங்களில் களையை கட்டுப்படுத்த, விவசாயிகள் நிழற்போர்வை அமைக்க, ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, தக்காளி, மா, கரும்பு, துவரை, பருத்தி, மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், காய்கறி பயிர்கள் மற்றும் மலர் சாகுபடி முக்கிய பங்கு வகித்து வருகிறது.பட்டன் ரோஸ், சாமந்தி, சம்மங்கி, கோழிக்கொண்டை, மல்லிகை, முல்லை உள்ளிட்ட மலர்கள் குறிப்பிட்ட பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது

இயற்கை முறையில் தழைச்சத்து தயாரிக்கும் முறை

தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. இபொழுது இயற்கை முறையில் எப்படி தழைச்சத்து நிறைந்த உரம் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

Subscribe to வீட்டுத்தோட்டம்