Skip to main content

"தல 61" - புதிய அப்டேட்!!!

அமிதாப்பச்சன் நடித்து இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் தமிழில் அஜித் நடிப்பில் "நேர்கொண்ட பார்வை" என்ற தலைப்பில் வெளியாகி வெற்றி அடைந்தது. 

இப்படத்தை போனிகபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி இருந்தார். மீண்டும் இவர்கள் கூட்டணியில் புதிய படம் தயாராகிறது. படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளது. 

இதில் மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அதிரடி சண்டை படமாக உருவாக்க உள்ளது. 

மணிரத்னம் இயக்கத்தில் த்ரிஷா!

மணிரத்தினம் இயக்கவுள்ள "பொன்னியின் செல்வன்" படத்தில் த்ரிஷாவும் இணைந்துள்ளார்.

கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். 

ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

 

திரைக்கு வர காத்திருக்கும் கோலிவுட் படங்கள்!

தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய 2 படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 

தீபாவளிக்கு முன்பு 10 பெரிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாமுனி Vs எனை நோக்கி பாயும் தோட்டா

ஆர்யாவின் மகாமுனி, நடிகர் தனுஷ் நடிப்பில் "எனை நோக்கி பாயும் தோட்டா", யோகிபாபுவின் ஜாம்பி ஆகிய 3 படங்களும் செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது.

மகாமுனியில் ஆர்யா 2 வேடங்களில் நடித்துள்ளார். 

சிக்ஸர் படக்குழுவினருக்கு கவுண்டமணி நோட்டீஸ்!

பிரபு நடிப்பில் வெளியான சின்னத்தம்பி படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் கவுண்டமணி நடித்திருப்பார்.

அப்படத்தில் அவருக்கு மாலை கண் நோய் இருக்கும், மாலையில் கண் தெரியாதவராக நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. 

அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து தற்போது "சிக்சர்" என்ற பெயரில் புதிய படம் தயாராகி திரைக்கு வந்துள்ளது.

சாச்சி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் வைபவ், பல்லக் லாவாணி ஆகியோர் நடித்துள்ளனர். 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandwithDHANUSH ‍!!!

"தனுஷ் நடிக்கும் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நிறுத்த வேண்டும்" என்று தயாரிப்பாளரும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான அழகப்பன் கூறியுள்ளார். 

இதனால் கோபம் அடைந்த தனுஷ் ரசிகர்கள், #WeStandwithDHANUSH எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

"அசுரன்" இசை வெளியீடு

ஆகஸ்ட் 28 அன்று, வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் "அசுரன்" திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. 

முன்கூட்டியே வெளியாகும் பிகில் ‍- எப்போது?

அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் படம் தயாராகி உள்ளது.

படப்பிடிப்பு இறுதி நாளில் துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 400 பேருக்கு தங்க மோதிரங்களை அவர் பரிசாகவும் வழங்கினார். இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

"நான் யாருக்கும் அடிமையா இருக்க முடியாது; எனக்கு அரசியல் வேண்டாம்!" - சத்யராஜ்

``எல்லாப் படங்கள்லேயும் என்னை வேற மாதிரியான சத்யராஜா மக்கள்கிட்ட காட்டணும். அதுமாதிரியான கதாபாத்திரங்கள்ல மட்டும்தான் நடிப்பேன். அதனாலதான், 'பாகுபலி' படத்துக்குப் பிறகு சில படங்களைத் தேர்வு செய்யலை'' - சினிமா சார்ந்த கேள்விகளில் ஆரம்பித்து அரசியல் சார்ந்த கேள்விகள் வரை அனைத்திற்கும் பதில் சொல்கிறார், சத்யராஜ்.

"இது தொடர்ந்தால், இன்னொரு பாலசந்தரோ பாரதிராஜாவோ கிடைக்கமாட்டார்கள்!" - ஆர்.கே.செல்வமணி

கியூப், யூ.எஃப்.ஓ கட்டணப் பிரச்னை தீரும்வரை புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாது எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் அண்மையில் முடிவு எடுக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. அதுபோக, தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மார்ச் 16 முதல் திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நேற்று சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 
 

பாகுபலி -2 பார்க்கப் போறீங்களா...?! இதைப் படிச்சுட்டுப் போங்க!

'பாகுபலி' வெளியாகி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. படத்தின் ஒட்டுமொத்த லைனே 'Why Kattappa Killed Baahubali?' என்பதாக மாறிவிட்டது. #WKKB என்ற ஹேஷ்டேக் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு இரண்டாம் பாகத்துக்கான செல்லிங் பாயின்டாக மாறியிருக்கிறது. 'பாகுபலி 2' நாளை வெளியாகிறது என்ற பரபரப்புக்கிடையே முதல் பாகத்தைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்துபார்க்கலாமா?

"விஜய் அப்பவே அப்படித்தான். அவர் இன்னும் மாறலை!" - 'ராஜாவின் பார்வையிலே' இந்திரஜா

"நான் தமிழ்ப் பொண்ணு. என்னைக்குமே தமிழையும் தமிழர்களையும் மறக்கமாட்டேன். ரசிகர்களும் என்னை மறக்கக் கூடாதுனு நினைக்கிறேன்" என்கிறார் நடிகை இந்திரஜா. 'ராஜாவின் பார்வையிலே' மற்றும் 'எங்கள் அண்ணா' படங்களில் நடித்தவர். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர். 

Subscribe to கோலிவுட் செய்திகள்