Skip to main content

கோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு!

கோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் 2 நாட்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள கோவளம் மற்றும் மாமல்லபுரத்தில் அக்டோபர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல்வேறு துறைகளில் கடும் போட்டியாளர்களாக உள்ளன.

அபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்!!!

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் 17.29 லட்சம் ஒழுங்கற்ற பயண வழக்குகள் மூலம் அபராத தொகையாக 92.19 கோடி ரூபாயை மத்திய ரயில்வே துறை வருவாயாக ஈட்டியுள்ளது.

பதிவு செய்யப்படாத லக்கேஜ் உட்பட முன்பதிவு இன்றி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததாக, சுமார் 2.72 லட்சம் வழக்குகள் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு 2.53 லட்சம் வழக்குகளாக இருந்தன, எனவே நடப்பாண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.50 சதவீதம் அதிகரித்துள்ளது.

Central Railway earns Rs 92 cr in fines from 17 lakh irregular travel cases

பிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்!

வெள்ளி கலசம், போட்டோ ஸ்டேண்ட் போன்ற பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் தலா 1 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பரிசு பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைப்பொருட்கள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

இவற்றை ஏலம்விட்டு அதன்மூலம் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டது.

பிரதமரின் 2,700 பரிசு பொருட்களை ஆன்லைன் மூலம் ஏலம் விடுவது கடந்த 14-ந் தேதி தொடங்கியது. 

புதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா!!!

நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (செப்டம்பர் 18) தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று மாநில செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மம்தா பானர்ஜி செப்டம்பர் 17 ஆம் தேதி புதுடெல்லிக்கு புறப்படுவார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்!!!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டிற்குள் 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

புதுடில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாற்றிய மத்திய சுகாதார அமைச்சர், தற்போது 22 ஆயிரம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 23 ஆம் தேதியுடன் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில்.

பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்களும், பொது மக்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரதமர் மோடிக்கு மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

hbd narendra modi

உள்துறை அமைச்சர் அமித் ஷா:

69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெறும் பிரதமர், தொடர்ந்து அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். 

பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14 ஆம் தேதி முதல் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (செப்டம்பர் 18) தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று மாநில செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மம்தா பானர்ஜி செப்டம்பர் 17 ஆம் தேதி புதுடெல்லிக்கு புறப்படுவார் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் மேற்கு வங்கத்தின் நிர்வாக பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாட வாய்ப்புள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம்: மத்திய அரசை அணுக கேரளா திட்டம்!

போக்குவரத்து மீறல்கள்: அபராதங்களைக் குறைப்பது குறித்து மத்திய அரசை அணுக கேரளா திட்டம்.

போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்டமோட்டார் வாகன சட்டம் 2019, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த புதிய சட்டத்தின்படி,

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

2020 ஆண்டில் தொழில் துவங்கும் வணிகர்களுக்கு - ஜிஎஸ்டி புதிய அறிவிப்பு !!!

ஜனவரி 2020 ஆண்டு முதல் தொழில் துவங்கும் புதிய வணிகர்களுக்கு, ஆதார் எண் கட்டாயம் தேவை என சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி குழுவின் தலைவரான அமைச்சர் சுஷில் குமார் மோடி கூறியதாவது: 

புதிய வியாபாரிகளுக்கு ஆதார் அங்கீகாரம் என்பது தற்போது வரை அவரவர் விருப்பமாக உள்ளது, இனி வரும் 2020 ஆம் ஆண்டு முதல் இது கட்டாயமாக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், போலி விலைப்பட்டியல்கள் உருவாக்கப்பட்டு பல பொய் கணக்குகள் ஏமாற்ற பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to இந்தியா