Skip to main content

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeStandwithDHANUSH ‍!!!

asuran

"தனுஷ் நடிக்கும் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நிறுத்த வேண்டும்" என்று தயாரிப்பாளரும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான அழகப்பன் கூறியுள்ளார். 

இதனால் கோபம் அடைந்த தனுஷ் ரசிகர்கள், #WeStandwithDHANUSH எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

"அசுரன்" இசை வெளியீடு

ஆகஸ்ட் 28 அன்று, வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் "அசுரன்" திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. 

இந்த நிகழ்வின் போது தனுஷ் கடந்த காலத்தில் தயாரிப்பாளர்களால் எவ்வாறு ஏமாற்றப்பட்டார் என்பதையும், அசுரன் படத்தின் படப்பிடிப்புக்கு முன்னர் தயாரிப்பாளர்கள் அவருக்கு ஊதிய தொகையை கொடுத்தது குறித்தும் பேசினார்.

asuran

தனுஷ் கூறுகையில், “இந்த நாட்களில் முழு ஊதியம் பெறுவது அரிதாகிவிட்டது. ஆனால் அசுரனில், தாணு சார் படப்பிடிப்புக்கு முன்பு எனது சம்பளத்தை கொடுத்துவிட்டார். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்று பேசினார். 

ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அசுரனின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு கூறுகையில், “தனுஷ் போன்ற நடிகர்கள் இந்தத் துறையைத் தக்கவைக்க உதவுகிறார்கள். அவர் தனது படங்களின் வெளியீட்டிற்காக கோடிக்கணக்கான பணத்தை விட்டுவிட்டார், இது அவரது அந்தஸ்துள்ள ஒரு நடிகருக்கு ஒரு அரிய குணம்" என புகழ்ந்துள்ளார்.

azagappan

ஆனால் கலைப்புலி எஸ் தாணுவின் அந்த அறிக்கை ஏ.எல்.அழகப்பனுக்கு கருத்து வேறுபாட்டை உருவாகியுள்ளது. 

இந்நிலையில் தயாரிப்பாளரும், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தந்தையுமான அழகப்பன் பேசியுள்ள காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் அவர் "தனுஷ் நடிக்கும் திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் நிறுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். 

Dhanush Fans Trend #WeStandWithDHANUSH after AL Azhagappan Demands Producers to Not Produce the Asuran Actor’s Films

Tamil