Skip to main content

தூத்துக்குடி கலவரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது - சிபிஐ

தூத்துக்குடி கலவரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது - சிபிஐ

தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக சிபிஐ தலைமை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறையிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிஐ தலைமையக உயரதிகாரி கூறுகையில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வழக்கு பதிவு செய்துள்ளோம். தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் காவல்துறையிடம் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக சிபிஐ தலைமை உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது, விரிவாக்கம் செய்வது, துப்பாக்கி சூடு வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த முன்னாள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். 

20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.