Skip to main content

தபால் வங்கி சேவை ஓராண்டு நிறைவு விழா: தமிழகத்திற்கு விருது!

india Post Payment Bank

தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 1 கோடி தபால் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 98 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்த சேவை துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற தபால் வங்கியின் ஓராண்டு நிறைவு விழாவில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கலந்து கொண்டார்.

india postal payment banks

அப்போது பேசிய அவர், "தபால் வங்கி சேவையில் இந்த ஓராண்டில் நாடு முழுவதும் 1 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. எனவே அடுத்த ஓராண்டில் தபால் வங்கிக்கணக்குகளின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்த்த வேண்டும்" என்றார்.

ஓராண்டு நிறைவையொட்டி, தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விருதுகளை வழங்கினார். 

ravishankar prasad

இதில் ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்காக (கோன் பனேகா பாகுபலி) இந்திய அளவில் முதல் இடத்துக்கான விருதை தமிழகம் பெற்றது. அதைப்போல "டிஜிட்டல் கிராமம்" திட்டத்தில் 3-வது இடத்துக்கான விருதையும் தமிழகம் பெற்றது.

இந்த விருதுகளை தமிழக தலைமை தபால்துறை தலைவர் சம்பத் தலைமையிலான குழுவினர் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் தபால்துறை செயலாளர் அனந்த் நாராயண்நந்தா, தபால் வங்கி நிர்வாக இயக்குனர் சுரேஷ் சேத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Indian Post Payment Bank's "KAUN BANEGA BAHUBALI"

Tamil