Skip to main content

தமிழகம் திரும்பினார் முதல்வர்!!!

edappadi k palanichamy

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டவர் பலரும் ஆர்வத்தில் உள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

வெளிநாடுகளில் 14 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கினார்.

முதலில் இங்கிலாந்து, அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். 

முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோரும் உடன் சென்றனர். 

eps return

அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர். 

அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் அங்கிருந்து, துபாய் சென்றடைந்தார்.

தொடர்ந்து, துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

eps

இதையடுத்து, முதலமைச்சர் தனது 14 நாள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துவிட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

"அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. அயல்நாட்டு அரசு முறை பயணம் தொடரும். 

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் உள்ளனர். சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளன. துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். அரசுப்பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என்று அவர் கூறினார்.

Tamil Nadu CM is Back From Foreign Trips.

Tamil